Newskadai.com
லைஃப் ஸ்டைல்

சல்யூட்: நீதி வழங்க வீதிக்கு வந்த கலெக்டர்…!! ஆச்சரியம் ஆனால் உண்மை…!

Share this:

சில நல்ல மனிதர்கள் அதிசயிக்கத்தக்க வகையில் உலகம் முழுவதும் பணியாற்றி கொண்டுதான் வருகிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் வருவதில்லை அல்லது மிகத் தாமதமாக எந்த விதமான முக்கியத்துவம் இல்லாமல் வரும். இந்த தகவல் அத்தகைய ஒரு மனிதரைப் பற்றியது. தெலுங்கானா மாநிலம் பூபால்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு நடக்க முடியாத மூதாட்டி வருகிறார். அவர் குர்ரம்பேட்டையைச் சேர்ந்த அஸ்மீரா மங்கம்மா. தனக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக மனு அளித்து காத்திருந்தார். அதனால் அவரது வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது.தனக்கு கிடைக்கவேண்டிய ஓய்வூதிய தொகையை பெறவேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாடி வந்தவருக்கு படிக்கட்டுகளில் ஏறி மாடியில் உள்ள மாவட்ட ஆட்சியரை சந்திக்க கால்கள் உதவவில்லை. ஆட்சியர் அலுவலகத்தின் வாசல் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து விடுகிறார். மாவட்ட ஆட்சியருக்கு இந்த மூதாட்டி பற்றி தகவல் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் மூதாட்டி அமர்ந்திருந்த அலுவலகப் படிக்கட்டுகளில் தானும் அமர்ந்து அவருடைய மனுவை விசாரிக்கிறார். அவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய தொகையை கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று DRDO சுமதியிடம் உத்தரவு பிறப்பித்தார். அப்துல் அசீம் என்ற அந்த ஆட்சியரின் செயல் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் இருந்த அனைவருக்கும் புதுமையாகவும் பெருமையாகவும் இருந்தது.


Share this:

Related posts

சிறுகதை : அசுரப்படை – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

#TodayGoldRate ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவா!? கொரோனா காலத்திலும் தாறுமாறு..!!!

NEWSKADAI

சீனாவை கழட்டிவிட்ட ஐபோன் நிறுவனம்… சென்னையில் படுஜோராக தொடங்கியது தயாரிப்பு…!

NEWSKADAI

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

MANIMARAN M

சிறுகதை : காளியான பெருமாள் – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி… இந்த வழிபாட்டை இன்று கட்டாயம் செய்யுங்கள்…!

NEWSKADAI