Newskadai.com
சினிமா தமிழ்நாடு

இந்தி தெரியாதா?… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…!!

Share this:

இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என்று கனிமொழி எம்.பி.க்கு விமான நிலையத்தில் நேர்ந்த அவமதிப்பைத் தொடர்ந்து முன்னணி தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தானும் இவ்வாறு விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக தற்பொழுது கூறியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல வெற்றிப் படங்களை தந்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கும் தனக்கென ஒரு தனித்துவ அடையாளத்தை கொண்டிருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன்.

பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆடுகளம் திரைப் படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் திரையிட்டுவிட்டு டெல்லி வழியாக இந்தியாவுக்குத் திரும்ப வருகிறோம். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த என்னிடம் குடிநுழைவு அதிகாரி இந்தியில் பேசினார். நான் ஆங்கிலத்தில் பேசுங்கள், எனக்கு இந்தி தெரியாது என்று ஆங்கிலத்தில் அவரிடம் கூறினேன். அவர் தாய் மொழி இந்தி தெரியாதா என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் என்னுடைய தாய்மொழி தமிழ் எனக்கு நன்றாக தெரியும், மற்றவர்களுடன் பேசுவதற்கு ஆங்கிலம் தெரியும் என்றேன்.

இதைகேட்டு கோபமடைந்த அவர், காஷ்மீரை சேர்ந்தவர்களும், தமிழகத்தை சேர்ந்தவர்களும் நாட்டை பிரிக்கவே செய்கிறீர்கள், என்று பொருள்படும்படி ஆங்கிலத்தில் கூறினார். அதாவது, யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி… தீவிரவாதிகள் அப்படினு பேசிவிட்டு என்னை தனியாக கொண்டு நிறுத்தி வைத்து விட்டார். என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், ஜி.வி.பிரகாஷும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த அதிகாரி கேட்கவேயில்லை. 45 நிமிடங்களுக்கு பின்னர் வேறொரு அதிகாரி வந்து என்னை அனுப்பி வைத்தார்.

நான் என்னுடைய தாய்மொழியை பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்? நாம வாழணும்னா நம்மோட பண்பாட்டை நாம காப்பாத்தணும். அதுக்காக மற்ற பண்பாட்டுக்கோ, மொழிக்கோ எதிராகச் செயல்படுவது நம்முடைய வேலையோ, நோக்கமோ கிடையாது என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

கமல் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய சீமான்… என்ன இப்படி சொல்லிட்டாரு…!!

NEWSKADAI

“மீண்டு வா… இசை உலகை ஆள வா”…. எஸ்.பி.பி. உடல்நலம் பெற வேண்டி வைரமுத்து உருக்கம்…!

NEWSKADAI

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை…!!

MANIMARAN M

எல்லா பணமும் கொரோனா சிகிச்சைக்கு தான்… முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி…!

NEWSKADAI

பக்தர்களுக்கு நல்ல செய்தி: இன்று கோயில்கள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை தெரிஞ்சிக்கிட்டு போங்க…!!

THAVAMANI NATARAJAN

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA