Newskadai.com
சினிமா

வேடந்தாங்கல் விவசாயியாக மாறிய இயக்குநர் வெற்றிமாறன்… பிறந்த நாள் ஸ்பெஷல் தகவல் இதோ…!

Share this:

பொல்லாதவனில் ஆரம்பித்த வெற்றிமாறனின் அசுர வளர்ச்சி அசுரன் மூலம் ஓட்டுமொத்த திரையுலகிற்கே தெரியவந்தது. தொடர் வெற்றி படங்களை இயக்கியும், தயாரித்தும் தமிழ் சினிமாவை விருது மழையில் நனைய வைக்கும் வெற்றிமாறன் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாலுமகேந்திராவிடம் பால பாடம் படித்தவர் என்பதாலோ என்னவோ வெற்றிமாறனின் கதையும் சரி, கதைக்களமும் சரி என்றுமே சொத்தையானது கிடையாது.

வெற்றி படிக்கட்டுகளில் மெல்ல ஏறி தற்போது பாலிவுட்டின் கதவுகளை தட்டியிருக்கிறார். தற்போது சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் கை கோர்த்திருக்கும் வெற்றிமாறன் அடுத்ததாக, தளபதி விஜய்யை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிமாறனின் சினிமா வாழ்க்கை பற்றி அனைவரும் அறிந்தது தான். அவருடைய சொந்த வாழ்க்கையில் என்ன செய்கிறார் என தெரிந்து கொள்ள வேண்டாமா?.

சினிமாவில் இயக்குநராக ஜொலிக்கும் வெற்றிமாறன் ஷுட்டிங் இல்லாத சமயங்களில் விவசாயியாக அவதாரம் எடுத்து வருகிறார். இதற்காக வேடந்தாங்கல் அருகேயுள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி பசுமை பண்ணை அமைத்திருக்கிறார். ஷூட்டிங் இல்லாத சமயங்களில் சிட்டாய் வேடந்தாங்கல் பறக்கும் வெற்றிமாறன் அங்கு நடக்கும் விவசாய பணிகளை மேற்பார்வை செய்வதோடு, தானும் சில வேலைகளை ஆர்வமாக செய்து வருகிறார்.

சரி நிலம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தவர் ஏன் வேடந்தாங்கலை தேர்வு செய்தார் தெரியுமா?. வெறிறிமாறனுக்கு சின்ன வயசில் இருந்தே வேடந்தாங்கல் மீது தனியொரு ஈர்ப்பு. அதற்கு காரணம் அங்கு வரும் பறவை இனங்களும், அதற்காக தீபாவளி கொண்டாட்டங்களை தியாகம் செய்யும் வேடந்தாங்கல் மக்களின் மனசு தான் என்கிறார். அதுமட்டுமில்லாமல் ராணிபேட்டை பகுதியில் பிறந்து வளர்ந்த வெற்றிமாறனுக்கு, பொல்யூஷன் என்றாலே சுத்தமாக ஆகாது. சின்ன வயசில் இருந்தே மாசுபடிந்த காற்றை சுவாசித்தவருக்கு, வேடந்தாங்கல் போன்ற இடம் சொர்க்க பூமி இல்லையா?. அதனால் தான் இங்கு நிலம் வாங்கி இருக்கிறார்.

விவசாயத்திற்கு மட்டும் அல்ல விரைவில் அங்கேயே வீடு கட்டி செட்டில் ஆகும் வேலையிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கு முன்னதாகவே திரையுலகில் இருந்து இயற்கை விவசாயத்தில் கால் பதித்த நடிகர்கள் கிஷோர், பசுபதி, பசுபதியின் மனைவி சூர்யா மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் தான் வெற்றி மாறனின் வழிகாட்டிகள். அவர்களிடம் ஆலோசனை பெற்றே பசுமை பண்ணையை சிறப்பாக நடத்தி வருகிறார்.


Share this:

Related posts

“ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்கலாம்”… மத்திய அரசின் பரிந்துரையால் நொந்து போன திரையரங்கு உரிமையாளர்கள்…!

NEWSKADAI

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி… சதா நாடார் மீது வழக்குப்பதிவு…!!

AMARA

“இதை செய்தால் எஸ்.பி.பி. நிச்சயம் மீண்டு வருவார்”… நம்பிக்கை கொடுத்த சிம்புவின் உருக்கமான கோரிக்கை…!!

AMARA

சூர்யாவின் முரட்டு ரொமான்ஸ்… தாறுமாறு வைரலாகும் “காட்டு பயலே” லிரிக் வீடியோ…!!

NEWSKADAI

திரையரங்குகள் திறக்கபடுமா..? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்…

MANIMARAN M

நயன்தாரா பட தயாரிப்பாளருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

NEWSKADAI