தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் கேமராமேனாக பணியாற்றி பின்னர், இயக்குநராக அங்கீகாரம் பெற்றவர் சிவா. 2011ம் ஆண்டு கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படம் தாறுமாறு ஹிட்டாக இயக்குநர் சிவா, சிறுத்தை சிவாவாக மாறினார். சிறுத்தை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தல அஜித்துடன் வீரம் படத்தை இயக்கினர். அண்ணன் – தம்பி சென்டிமெண்ட் உடன் பகை, பழிவாங்கல், பாசம் என அனைத்தையும் கலந்து கொடுத்த வீரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அதன் பின்னர் விஸ்வாசம், விவேகம், வேதாளம் என அடுத்தடுத்து அஜித் – சிறுத்தை சிவா கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை இயக்கியவர். குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், சிறுத்தை சிவா குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுத்தை சிவா குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய தந்தை ஜெயக்குமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று மாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். இந்த செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.