Newskadai.com
சினிமா

“என் இனிய தமிழக அரசே…” பாரதிராஜாவின் உருக்கமான கடிதம்

Share this:

இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதன் சாராம்சம் :

  • தமிழகத்தில் பொது முடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது.

  • இத்தனை நாட்கள் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதும் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருப்பதும் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதன்முறை.

  • திரைப்படத் துறையை சார்ந்து வாழும் எத்தனையோ ஏழைத் தொழிலாளர்களின் வயிறு பட்டினி கிடக்கிறது.

  • சேமிப்புகள் கரைந்து கடனுக்கு மேல் கடனுக்கு ஆளாகி திரைத்துறை மீண்டு வரும் நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

  • தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் இழப்புக்கு மேல் இழப்பை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.

  • இந்நிலை தொடராமல் தமிழ் சினிமா மீண்டும் மூச்சுவிட ஒரு வழிகாட்டலை திரைத்துறைக்கு வகுக்க கேட்டுக்கொள்கிறேன்.

  • சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தந்தது போல், சிறிய குழுவினருடன் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெற ஆவண செய்யுமாறு அனைத்து சினிமா தொழிலாளர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

  • நாளை நாட்டிற்கான சுதந்திர நாள். அந்த நாளன்று தங்களது சுதந்திர தின அறிக்கையில் எங்கள் திரைத்துறை சிக்கல்களுக்கான விடுதலையும் இடம் பெறவேண்டும் என விரும்புகிறோம்.

  • தங்கள் வழிகாட்டல் விதிமுறைகளை மீறாமல் சீராக கடைபிடித்து கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்போடு பணி செய்து கொள்வோம்.

  • தங்களின் மேலான வழிகாட்டலையும் படப்பிடிப்பிற்கான அனுமதியையும் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

என்று பாரதிராஜா தனது கடிதத்தில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


Share this:

Related posts

எஸ்.பி.பி.க்காக வீதிக்கு வந்த ரசிகர்கள்… , “பாடும் நிலா எழுந்து வா” என உருக்கமான வேண்டுதல்….!

AMARA

“நாட்டின் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்”… உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்பதாக சூர்யா உறுதி…!

MANIMARAN M

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி… சதா நாடார் மீது வழக்குப்பதிவு…!!

AMARA

மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…!!

THAVAMANI NATARAJAN

“10 லட்சம் குடும்பத்தை காப்பாத்துங்க”… முதல்வரிடம் கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்… பாலிவுட்டை பதற்றத்தில் ஆழ்த்திய பீகார் முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

AMARA