Newskadai.com
சினிமா வீடியோ

எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….!!

Bharathiraja
Share this:

இந்தியா அளவில் புகழ் பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திரைத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் எஸ்.பி.பி. பூரண நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்தனர்.

SPB

அதனால் இரு தினங்களுக்கு முன்பு எஸ்.பி.பி. ஐசியூவில் இருந்தாலும் கண்விழிந்து விட்டதாகவும், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த செய்தி சற்றே மனதிற்கு ஆறுதல் கொடுத்த நிலையில், நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 50 ஆண்டு கால நண்பரும், இயக்குநருமான பாரதிராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எஸ்.பி.பி.பாலு எழுந்து வாடா. வாடா என அழைக்கும் உரிமையை நீயும், நானும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து 50 ஆண்டுகள் ஆகிறது. உனக்கு நியாபகம் இருக்கிறதா? நீ ஒரு கார் வைத்திருந்தாய். அதை நீயே தான் ஓட்டிக்கொண்டு போவாய். அப்போது நானும் உடன் வருவேன். ஏன்? உனக்கு தூக்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கதை சொல்லிக்கொண்டே வருவேன் என்பது முதல் எஸ்.பி.பி. பாரதிராஜாவின் படத்தை தயாரிப்பதற்காக பல்லவி புரோடக்‌ஷனை ஆரம்பித்தது வரை பல நினைவுகளை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து, உன் வீட்டு உப்பு தின்னு வளர்ந்தவங்க டா? எங்களை விட்டு போக எப்படிடா உனக்கு மனசு வரும். வராது டா. நீ திரும்ப வந்துடுவா என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. என்னுடைய 16 வயதிலேயே படத்தில் “செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா” பாடலை நீ தான் பாடியிருக்க வேண்டும். ஆனால் அன்னைக்கு உன் தொண்டை சரியில்ல, பாட முடியல. அதனால் தான் உன் இடத்தில் மலேசியா வாசுதேவனை வைத்து பாட வச்சேன்.

இரண்டு நாட்களாக உன்னை நினைத்து அழுது கொண்டிருக்கிறேன். இந்த பதிவில் கூட அழக்கூடாது என்று நினைத்தேன் (அப்படி கூறும் போதே அவருடைய கண்களில் கண்ணீர் பனிக்கிறது?. நீ கண்டிப்பாக வந்துவிடுவாய். நான் வணங்கும் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களும் உண்மை என்றால் நீ மறுபடியும் வருகிறாய். இன்னும் 1000 பாடல்களை பாடுகிறாய். நீ ஒரு ஆண் குயில்… வந்துடுடா பாலு” எனக்கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இதோ அந்த உருக்கமான வீடியோ…

 


Share this:

Related posts

கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பாலசுப்ரமணியம்??… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

AMARA

“அதுக்கு மட்டும் நோ”… கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்ட சாய் பல்லவி…!!

NEWSKADAI

தமன்னாவின் பெற்றோருக்கு உறுதியானது கொரோனா தொற்று… கலக்கத்துடன் வெளியிட்ட அறிக்கை…!

NEWSKADAI

“மீண்டும் கவலைக்கிடம்”… எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை குறித்து வெளியான மருத்துவ அறிக்கை…!!

AMARA

ஓடிடி தளத்தில் வெளியாகிறது “சூரரைப் போற்று”…. ரிலீஸ் தேதியுடன் சூர்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

AMARA

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… சற்று நேரத்திற்கு முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை…!!

AMARA