Newskadai.com
சினிமா

விஷால் அன் கோ-வை அலறவிட்ட பாரதிராஜா… ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கும் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்…!!

bharathi raja
Share this:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30ம் தேதி முடிவிடந்தது இதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் பணிகளை தமிழக வணிகத்துறை மாவட்ட பதிவாளரான என்.சேகர் எனபவரை நியமித்தது.

தனி அதிகாரியின் நியமன உத்தரவை கண்டித்து அதனை ரத்து செய்ய கோரி முன்னாள் தயாரிப்பு சங்க தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நிர்வாகி நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும், மேலும் ஜூன் 30ம் தேதிக்கள் தேர்தலை நடத்தி ஜூலை 30ம் தேதிக்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்து.

 

 

தற்போது அந்த காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள இயக்குநர் பாரதிராஜா, கொரோனா காலத்தில் தயாரிப்பாளர்கள் படும் கஷ்டங்களை போக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் இனிய தயாரிப்பாளர்களே… கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கது தான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும்… புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது. தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையு வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும். தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இங்கு யாருமே பேசுவதில்லை. அதன் வலியை அப்பிள்ளை வெளிப்படுத்தாதால், அவ்வலியை நாம் உணராமலே போய்விடுகிறோம் .

ஆனாலும் நான் வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தை. இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது. வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது. கடந்த எனது அறிக்கையில் சக தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசித்தான் இன்னொரு சங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தேன். அடிப்படைப் பேச்சு வார்த்தைகளின் போதே செய்திகள் காற்றில் கசியத் தொடங்கி சில கருத்து வேறுபாடுகளைப் பரப்பத் தொடங்கிவிடுகின்றன. முழுமையான முடிவெடுக்கும் முன் காதுகள் முந்திக் கொண்டு விடுகின்றன. இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது.

ஒரு மடை அடைத்துக் கொண்டால் இன்னொரு மடையைத் திறப்பது போல்தான் இதுவும். நாம் செயல்பட்டே ஆண்டுகளாகிவிட்டன. பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக் குறி எல்லாவற்றிற்கும் பதில் தேடுவது முக்கியம். தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை வீட்டின் ஆளுமை அவள்தான். அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை. இது செயல்பட வேண்டிய காலகட்டம். கொரானாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது. கையைப் பிசைந்து கொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது?.

அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து மற்ற நிர்வாகிகள் குழுவினர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். பாரதிராஜாவாகிய எனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறோம். இதைப் பிரித்தாள்கிறோம் என யாரும் நினைக்க வேண்டாம். சில முக்கிய முடிவுகளுக்காய் உழைக்க இருக்கிறோம். நிறைவாக சொல்வதென்றால், இப்பிறப்பின் செயல்பாடுகள் சினிமாவின் ஆரோக்கியம் கருதியே தொடங்குகிறது! …..பாரதிராஜா என குறிப்பிட்டுள்ளார்.


Share this:

Related posts

தமன்னாவின் பெற்றோருக்கு உறுதியானது கொரோனா தொற்று… கலக்கத்துடன் வெளியிட்ட அறிக்கை…!

NEWSKADAI

லாக்டவுனில் இப்படி ஒரு காரியம் செய்தாரா தல அஜித்?… தாறுமாறு வைரலாகும் போட்டோவால் குஷியான ரசிகர்கள்…!!

NEWSKADAI

சூர்யாவின் முரட்டு ரொமான்ஸ்… தாறுமாறு வைரலாகும் “காட்டு பயலே” லிரிக் வீடியோ…!!

NEWSKADAI

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… சற்று நேரத்திற்கு முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை…!!

AMARA

மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…!!

THAVAMANI NATARAJAN

திரையரங்குகள் திறக்கபடுமா..? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்…

MANIMARAN M