Newskadai.com
சினிமா

இயக்குநர் அட்லி வீட்டில் திடீர் மரணம்… துடிதுடிக்கும் சோகத்துடன் பகிர்ந்த உருக்கமான பதிவு…!!

Share this:

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநரான அட்லி வீட்டில் ஏற்பட்டுள்ள திடீர் சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Atlee
தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே முன்னணி இயக்குநராக புரோமோஷன் பெற்றவர் இயக்குநர் அட்லி. ஆர்யா, நஸ்ரியா, நயன்தாரா, சத்யராஜ், சந்தானம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களைக் கொண்டு அட்லி இயக்கிய , “ராஜா ராணி” திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது.

 

முதல் படத்திலேயே முத்திரை பதித்ததால் அடுத்தடுத்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கினார். மூன்றுமே வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பிகில் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது.

 

Atlee
சின்னத்திரையில் தடம் பதித்து வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வர முயன்று கொண்டிருந்த நடிகை ப்ரியாவை 2104ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் அட்லி.

 

Atlee
சினிமா மற்றும் திருமண வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் மீள முடியாத சோகம் ஒன்று அரங்கேறியுள்ளது.

 

Atlee
தனது மனைவி ப்ரியாவின் தாத்தா கலியராஜ் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக இயக்குநர் அட்லி தனது சோசியல் மீடியா பக்கங்களில் சோகத்துடன் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

 

Atlee
அதில், ப்ரியாவின் தாத்தா இன்று இறந்துவிட்டார். அவரை தாத்தா என்று கூப்பிடுவது அவருக்கு பிடிக்காது, அதனால் அவரை ப்ரோ என்று தான் கூப்பிடுவேன். போன வாரம் கூட எங்க கூட நல்ல தான் பேசினார். அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனக்கு நல்ல நண்பனாக நலம் விரும்பியாக இருந்தார். மின்னலே படத்தில் வரும் சுப்புனி தாத்தா போல் நடந்து கொள்வார்.

 

Atlee
எங்கள் குடும்பம் ஒரு தூணை இழந்துவிட்டது. ஒரு இளம் நண்பர் கலியராஜ் லவ் யூ ப்ரோ. எங்கள் வாழ்க்கையில் உங்களுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இந்த நாள் வாழ்க்கையில் பல விஷயங்களை உணரவைத்துள்ளது … எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பதை உணர வேண்டியது இதுதான். எனவே உங்களுடைய அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது கடவுள் கொடுத்த பரிசு. லவ் யூப்ரோ… என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 


Share this:

Related posts

விஜய் சேதுபதிக்கு வந்த பார்ட் 2 காய்ச்சல்… தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… சற்று நேரத்திற்கு முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை…!!

AMARA

மாட்டிவிட்ட வாட்ஸ் அப்… போதைப்பொருள் விவகாரத்தில் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகானுக்கு சம்மன்…!!

AMARA

“10 லட்சம் குடும்பத்தை காப்பாத்துங்க”… முதல்வரிடம் கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

மாஸ்க் போட்டு வந்த மலர் டீச்சரை மடக்கிய மாணவர்கள்… வளைச்சி, வளைச்சி போஸ் கொடுத்தே டையர்டு ஆன சாய்பல்லவி…!!

THAVAMANI NATARAJAN

“எஸ்.பி.பி. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்”… மகன் சரண் வெளியிட்ட வீடியோ…!!

AMARA