Newskadai.com
சினிமா

“I am a Tamil பேசும் இந்தியன்”… மகனுடன் சேர்ந்து கெத்தாக போஸ் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன்…!!

Share this:

கடந்த மாதம் விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக்கூறியதால் சி.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என கேட்டதாக திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. இந்தியை கட்டாயமாக திணிக்க முயற்சிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். சோசியல் மீடியாவிலும் இந்தி திணிப்பிற்கு எதிரான கருத்துக்கள் தீயாய் பரவின.

இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான இயக்குநர் வெற்றிமாறன், விமான நிலைய அதிகாரியிடம் இந்தி தெரியாது எனக்கூறியதற்காக தன்னை 45 நிமிடங்கள் தனியாக நிற்க வைத்ததாகவும், தமிழ் தீவிரவாதி என விமர்சித்ததாகவும் சமீபத்தில் வார இதழ் ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்தி திணிப்பை எதிர்க்கும் விதமாக திரைபிரபலங்கள் நூதன போராட்டம் ஒன்றை கையில் எடுத்தனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் நடிகர் சிரிஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. அதில் யுவன் அணிந்திருந்த டி-ஷட்டில் “I am a தமிழ் பேசும் indian” என்றும், சிரிஷின் டி-சர்ட்டில் “இந்தி தெரியாது போடா” என்ற வாசமும் இடம் பெற்றிருந்தது. நடிகர் சாந்தனு அவரது மனைவியுடனும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரனுடன் “இந்தி தெரியாது போடா” என்ற வாசகத்துடன் டி-ஷர்ட்டை அணிந்தபடி போட்டோ வெளியிட்டனர். இதையடுத்து #ஹிந்திதெரியாதுபோடா என்ற ஹேஷ்டேக்கும் தேசிய அளவில் ட்ரெண்டானது.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன், தனது மகனுடன் வெளியிட்ட போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற டி-சர்ட்டில் “I am a Tamil பேசும் இந்தியன்” என்ற வாசகத்துடன் சும்மா கெத்தாக அப்பாவும், பிள்ளையும் போஸ் கொடுத்துள்ளனர். இந்தி திணிப்பிற்கு எதிராக திரையுலகினர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருவது வரவேற்பை பெற்று வருகிறது.


Share this:

Related posts

சஞ்சய் தத்துக்கு இப்படியொரு நிலையா?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

MANIMARAN M

எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….!!

NEWSKADAI

“இத்தோட நிறுத்திக்கிட்ட நல்லது”… விஜய், சூர்யா குடும்பம் மீது வரம்பு மீறும் விமர்சனம்… மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பாரதிராஜா…!!

THAVAMANI NATARAJAN

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

AMARA

“மனிதாபிமானமற்றவர்களாகி விட்டோம்”… நடிகர் மாதவன் சாடல்…!!

NEWSKADAI

அமைதியாக இருந்த அஜித்தையே சீண்டிவிட்டாங்களே… வெகுண்டெழுந்து வெளியிட்ட அதிரடி அறிக்கை…!

AMARA