Newskadai.com
தேர்டு ஐ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக தான் மத்திய அரசு புதிய சுற்றுச்சூழல் வரைவு அறிவிக்கையை (EIA2020) அவசர அவசரமாகக் கொண்டு வந்ததா???

Share this:

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் காற்று நீர் மண் மாசுபாடு அடைவதாகவும் அதனால் அங்குள்ள மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பலவித நோய்கள் ஏற்படுவதாகவும்  கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து கொண்டே சென்றது. போராட்டத்தால் திணறிய அரசு மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாயினர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. வேறு வழியில்லாமல் தமிழக அரசு கடந்த 2018 மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குப் போட்டது. இவ்வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. வேதாந்தா நிறுவனமும் உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றமோ சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளனர். தமிழக அரசு, சமூக ஆர்வலர்கள், தூத்துக்குடி மக்கள் அனைவரும் இத் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Share this:

Related posts

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

‘கேங்ஸ்டர்’ விகாஷ் துபே என்கவுண்டர்… மறைந்திருக்கும் மர்மம் என்ன?

NEWSKADAI

முருகனும் தந்தை பெரியாரும்… தீப்பொறி தீயாய் மாறியது எப்படி…?

NEWSKADAI

பாகம் 1: வேதங்கள் அறிவோம்… நான்கு வேதங்கள் குறித்து முக்கிய தகவல்கள்…!

NEWSKADAI

உயிர் பலி கேட்கும் நீட் தேர்வு இன்று தொடங்குகிறது…

NEWSKADAI

அழிவின் விளிம்பில் யானை எனும் பேருயிரி… பாதுகாக்க மறந்த மனித இனம்…!!

MANIMARAN M