Newskadai.com
தமிழ்நாடு

“இ பாஸ் தேவையா?”… தமிழக அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மனித உரிமை ஆணையம்.

Share this:

கொரோனா நோய்த்தொற்று (COVID-19) தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் பலகட்ட லாக்டவுன்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய மூன்றாவது லாக் டவுன்- ஐ நாடு முழுவதும் அமல்படுத்தியது. அதில் தனிநபர்கள் மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கு உள்ளும் எந்தவிதமான தடையும் இன்றி பயணம் செய்யலாம். இ-பாஸ் தேவை இல்லை என்று அறிவித்திருந்தது. மேலும் மாநிலங்கள் ஊரடங்கில் தங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது. தமிழக அரசு தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த இ- பாஸ் முறை தொடரும் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இப்பொழுது வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு கூட. இ – பாஸ் முறை கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்கள், விவசாயிகள், சிறுதொழில் முனைவோர் அனைவரும் இதனால் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள மனித உரிமை ஆணையம் தமிழக தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், “மத்திய அரசின் விதிகளை மீறி இ- பாஸ் முறையை தொடர்வது மனித உரிமை மீறல் ஆகாதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Share this:

Related posts

தாய்மார்களே உஷார்: கோவையில் தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி…!!

MANIMARAN M

மதுரையில இதெல்லாம் சாதாரணம்ப்பு… இது மூணாவதப்பு…

THAVAMANI NATARAJAN

இன்று +1 விடைத்தாள் நகல் வெளியீடு… பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… சாத்தான்குளம் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு மாற்றம்…!!

AMARA

வேலையில்லனா என்ன பாஸ்…!! பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய அசத்தல் இளைஞர்கள்..!!

MANIMARAN M

அடித்து நொறுக்க போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

NEWSKADAI