தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஒட்டர்தின்னை கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவர் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ராஜேஸ்வரி என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்துவரும் ராஜேஸ்வரினின் தந்தை இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார், அதன் பின்னர் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி விஜய்யை அழைத்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 1 ம் தேதி மர்மமான முறையில் விஜய்யை அடித்து உடல் முழுவதும் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கும்மனூர் சாலையில் கிடந்தார். விஜய்யை கொலை செய்த குற்றத்திற்காக ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் மற்றும் அவருக்கு உதவி செய்த உறவினர்கள் 6 பேர் கைது செய்யப்படனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்த பொழுது விஜய்யை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்று மாந்தோப்பில் வைத்து இரும்பு கம்பியால் அடித்தாகவும் அடித்தில் உயிரிழந்த விஜய்யை இருசக்கர வாகனத்தோடு எடுத்து சென்று கும்மனூர் சாலையில் போட்டதாகவும் தெரிவித்தனர்.