Newskadai.com
தமிழ்நாடு

போராட்டத்தை தடுக்க வந்த போலீசாருக்கு கொரோனா… மரண பீதியில் ஊத்தங்கரை மக்கள்…!!

Share this:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள TK கெங்கபரம்பட்டு பகுதியில் தனியார் பால் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மாது என்ற 24 வயது இளைஞர் நேற்று காலை 7 மணி அளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாது கம்பெனி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து மாதுவின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் அங்கு குவிந்தனர். மாது தற்கொலை செய்து கொள்ள எவ்வித காரணமும் இல்லை என்றும், அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. பொதுமக்களின் போராட்டத்தை கலைப்பதற்காக அங்கு ஏராளமான போலீசார் வந்திருந்தனர், அவர்கள் மக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் 7 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த போராட்டத்தை தடுப்பதற்காக வந்த 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றவும், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தவும் போலீசார் முயன்று வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க : http://ஊத்தங்கரையில் சந்தேக மரணம்… தனியார் பால் நிறுவன வளாகத்தில் ஊழியர் சடலமாக மீட்பு… அதிர்ச்சி வீடியோ…!!

ஊத்தங்கரை காவலர்கள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பிற காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று காலை ஊத்தங்கரை காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பிற்கு வந்த காவலர்களே கொரோனாவின் தூதுவர்களாக மாறியது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

“இனி சனிக்கிழமையிலும் வொர்க்கிங் டே”… அரசு அலுவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!

THAVAMANI NATARAJAN

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 14-ஆவது இடம். மத்திய அரசின் சதியா ?அமைச்சர் பரபரப்பு தகவல்…

MANIMARAN M

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய செவிலியர்… ஜிப்மர் மருத்துவமனையில் வெடித்தது போராட்டம்…!!

MANIMARAN M

தமிழகத்தில் கொரோனா… (30-08-2020) இன்றைய நிலை…!?

NEWSKADAI

மன்னிப்பு கேட்டால் விட்டுடுறோம்… எஸ்.வி.சேகருக்கு கெடு விதித்த காவல்துறை…!!

MANIMARAN M