Newskadai.com
தமிழ்நாடு

நீட் தேர்வால் தருமபுரி மாணவன் தற்கொலை… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…!!

Share this:

பெரும் எதிர்ப்புகளுக்குகிடையே தற்போது நாடு முழுவதும் நீட் நடைபெற்று வருகிறது. கொரோனா நெருக்கடி காரணமாக மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை இந்த ஆண்டாவது ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கைகள் எழுந்து வந்தன. ஆனால் அதை எல்லாம் ஏற்க மறுத்த மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என அறிவித்தன. கொரோனாவால் பயிற்சி வகுப்புகளும் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் மருத்துவ கனவுகளுடன் நீட் தேர்வுக்கு பயின்று வந்த மாணவ, மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

Adithiya

இதனால் நேற்று மட்டும் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். நீட் தேர்வால் ஏற்பட்ட அச்சம் காரணமாக மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா, தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால் ஆகியோர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது, தமிழகத்தை கொந்தளிக்க வைத்தது. இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து தற்போது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

Adithiya
 

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் இலக்கியம் பட்டியில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஆதித்யாவின் உடல் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் மாணவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது, அதை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களிடம் அனுமதி பெறாமல் மாணவனின் உடலை கூறாய்வு செய்ததாக குற்றச்சாட்டிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஆதித்யாவின் தாயார் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Share this:

Related posts

நீதிபதிக்கே இந்த நிலைமையா..?? கொதித்தெழுந்த மனித உரிமை ஆணையம் காவல் துறைக்கு நோட்டீஸ்…

MANIMARAN M

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…!!

MANIMARAN M

முனீஸ்வரருக்கு தானமாக இடமளித்த அப்துல் காதர்…..

MANIMARAN M

இரவில் நடந்த கொடூரம் : கோவை மாநகரில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி..!!

MANIMARAN M

ஆன்லைன் கல்விக்கு வழியில்லையா!? வீடு தேடி போய் அசத்தும் கோவை ஆசிரியர்…!!

THAVAMANI NATARAJAN

பாலியல் வழக்கில் கைதான மகன்… ஒருவேளை சோற்றுக்கூட வழியில்லாமல் தள்ளாடும் பிரபல நடிகர்…!!

THAVAMANI NATARAJAN