Newskadai.com
தமிழ்நாடு

கடலில் குளிக்க தடை : வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்…

Share this:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் இருக்கும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் யாருக்கும் இதில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் 9ஆம் தேதி முதல் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலுள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது பேராலய நிர்வாகம். இதனால் தற்போது வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. இங்கு வரும் பக்தர்கள் வழிபாடு முடிந்து கடலில் குளிக்க செல்வது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை விதித்தும், கடற்கரை பகுதிக்குள் பக்தர்களை அனுமதிக்காமலும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல முடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Share this:

Related posts

நீதிமன்றம் விட்டாலும் நாங்க விடமாட்டோம்… சூர்யாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த இந்து இளைஞர் முன்னணி…!!

MANIMARAN M

திருச்செந்தூர் முருகன் கோயில் தேர்த் திருவிழா ரத்து…

POONKUZHALI

அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி..

THAVAMANI NATARAJAN

“வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம்”… ஜலகையில் இயற்கையை காக்க புதிய முயற்சி…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA