Newskadai.com
இந்தியா

குட் நியூஸ் : ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி…

Share this:

நவம்பர் மாதத்திலிருந்து கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பக்தர்களை சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. ஜாதி மொழி எல்லைகளைத் தாண்டி தென்னிந்தியா முழுவதும் ஏராளமான பக்தர்களை கொண்டிருப்பவர் சுவாமி ஐயப்பன்.

சபரி மலையில் குடிகொண்டிருக்கும் ஐயப்பனை காண மாலை போட்டு விரதம் இருந்து பல மைல்கள் நடந்து வந்து 18 படிகள் ஏறி ஐயப்ப சுவாமியை காண்பதில் ஏற்படும் பரவச உணர்வை வார்த்தைகளில் வெளிப்படுத்த இயலாது. அந்த உணர்வை மீண்டும் மீண்டும் அனுபவிக்க பல வருடங்களாக தொடர்ந்து செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள்.

இவ்வாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக பல கோயில் திருவிழாக்கள் வெறும் சம்பிரதாயமாக மட்டுமே நடந்து வருகிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி வரை வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

மேலும் கும்பம் மாத பூஜைக்காக அக்டோபர் 16ஆம் தேதி நடை திறக்கும்போது பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் நவம்பர் 16-ஆம் தேதி துவங்கும் மண்டல பூஜை காலம் முதல் கட்டுப்பாடுகள், விதிமுறைகளுடன் பக்தர்களை சபரிமலையில் அனுமதிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.


Share this:

Related posts

“மாணவர்கள் மன உளைச்சலுக்கு பெற்றோர்களே காரணம்”… பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு…!!

MANIMARAN M

இறுதி செமெஸ்டர் எழுதாமல் பட்டம் கிடையாது..!!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

MANIMARAN M

“அப்படி எல்லாம் மாற்ற முடியாது”…. பி.எம்.கேர்ஸ் நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

MANIMARAN M

செப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு…!!

AMARA

சரக்கில் சானிடைசர் கலந்தடித்த 10 ‘குடி’மகன்கள் பலி…. ஆந்திராவில் அரங்கேறிய பரிதாபம்…!!

NEWSKADAI

சல்யூட் போடு… இன்று கார்கில் வெற்றி நாள்… தீரத்தோடு போரிட்டு வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை…!!

NEWSKADAI