Newskadai.com
இந்தியா தேர்டு ஐ

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

Share this:

  • பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய சிறுசிறு காவி குழுக்களால் பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர் இவர்கள் மீது காவல்துறை அரிதாகவே நடவடிக்கை எடுத்தது.

  • பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியன சிறுபான்மையினருக்கும் பட்டியல் இனத்தவருக்கும் எதிராக பயன்படுத்தப் படுகிறது.

  • 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டம் மதத்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுவதாகவும் சிறுபான்மையினருக்கு எதிராகவும் உள்ளது.

  • குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து அறவழியில் போராடிய மக்கள் மீது பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர். ஜாமிஆ பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

  • டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆயுதம் தாங்கிய குண்டர்கள் காவல்துறையினரின் அனுமதியோடு மாணவர்களையும் ஆசிரியர்களையும் அடித்து நொறுக்கினர்.

  • ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் மாநிலம் பிளக்கப்பட்டது. காஷ்மீர் முதல்வர் சட்டத்துக்குப் புறம்பான வகையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

  • அரசியலமைப்பு சட்டத்தின் அங்கங்களான தேர்தல் ஆணையம், தலைமைக் கணக்காயர், சிபிஐ, நடுவண் விழிப்புணர்வு ஆணையம், போன்ற பொது அமைப்புகள் சீரழிக்கப்பட்டுள்ளது.

  • தேர்தல் பத்திரங்கள் மூலம் மறைமுகமாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை அமல்படுத்திய பிஜேபி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடந்த மூன்று வருடத்தில் பெற்றுள்ளது.

Rafale

  • பிஜேபிக்கு பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் எவ்வித விவாதமும் இன்றி சட்டத்திற்குப் புறம்பான வழியில் அனைத்து சட்டத் திருத்தங்கள், மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

  • ரஃபேல் ஒப்பந்த வழக்கில் தலைமைக் கணக்காயர் அலுவலகம் அரசுக்கு பணிந்து தவறான தகவலை கொடுத்துள்ளது.

  • சிபிஐ இயக்குனர் ரஃபேல் ஒப்பந்தத்தை விசாரிக்க முனைந்ததால் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக இயக்குனர் ஆக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் என்பவர் 40 பேரை அரசுக்கு ஆதரவாக இடமாற்றம் செய்தார்.

  • பிரதமர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் பெருமளவில் பெற்ற கணக்கில் வராத பணத்தை காட்டும் சஹாரா மற்றும் பிர்லா குழுமங்களின் ஆவணங்கள் மறைக்கப்பட்டது.

  • கட்டுப்பாடற்ற பெருமுதலாளிகள் நாட்டின் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் ஏமாற்றி லட்சக்கணக்கான கோடிகளை சூறையாடினர். வெளிநாட்டில் குடியேறிய இவர்களை பிடித்து வருவதற்காக அரசு வெறும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.

  • ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. ரகுராம் ராஜன் கடன் மோசடி செய்தவர்கள் சொத்துக்கள் குறித்து விசாரிக்க முயன்றதாலும், உர்ஜித் படேல் ஒரு லட்சம் கோடி பணத்தை பிஜேபி அரசுக்கு தர மறுத்ததாலும் வெளியேற்றப்பட்டனர்.

  • நூற்றுக்கணக்கான கோடி அரசு விளம்பரங்கள் மூலம் ஊடகங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.

  • நீதிபதி அருண் மிஸ்ரா வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொண்டார். சஹாரா வழக்கில் அவர் பயனடையும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

  • 2016 தற்கொலை செய்துகொண்ட அருணாச்சலப் பிரதேச முதல்வர் கலிக்கோ புல் தனது தற்கொலை கடிதத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க 37 கோடிகள் கேட்டதாக எழுதியிருந்தார். இன்று வரை அது தொடர்பான புலனாய்வு விசாரணை நடைபெறவில்லை.

  • பாபர் மசூதி வழக்கில் அவசரம் காட்டிய நீதிபதி ரஞ்சன் கோகாய் 40 நாட்கள் தொடர்ச்சியாக வழக்கை விசாரித்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என அளித்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சிக்கு முரணான தீர்ப்பு.

  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை அவரே விசாரித்தது தவறு. வழக்கின் இறுதி அறிக்கை வெளியிடப்படவில்லை.

  • உதவிக்கு பதவி என்ற அடிப்படையில் அயோத்தி வழக்கில் பிஜேபிக்கு சாதகமாக தீர்ப்பு அளித்த ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • குடியுரிமை திருத்த சட்டம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கு, காஷ்மீர் வழக்கு, 4Gஅலைக்கற்றை வழக்கு ஆகியவற்றில் நீதிபதி போப்டே யின் உத்தரவுகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக இல்லை.

  • மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் அரசுக்கு சாதகமாக செயல்பட்டதால் குடியாட்சி சிதைக்கப்பட்டுள்ளது.

  • கடந்த ஆறு ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வேலை இழப்பு உச்சத்தைத் தொட்டு நிற்கிறது.

மேற்சொன்ன கருத்துக்கள் யாவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மன்னிப்பு கேட்க மறுத்த பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் தனது வாக்கு மூலமாக பதிவு செய்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Share this:

Related posts

பாகம் 1: வேதங்கள் அறிவோம்… நான்கு வேதங்கள் குறித்து முக்கிய தகவல்கள்…!

NEWSKADAI

லாக்டவுனிலும் வாடகை தந்தே ஆக வேண்டும்… ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அதிரடி…!..!

NEWSKADAI

கேரளாவை உலுக்கும் ‘கொரோனா’… தீயாய் வேலையை ஆரம்பித்த பினராயி விஜயன்…!!

NEWSKADAI

மீண்டும் உடல் நலக்குறைவு… உள்துறை அமைச்சர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

MANIMARAN M

அதிர்ச்சி… கொரோனா தொற்றுக்கு பெண் அமைச்சர் உயிரிழப்பு…!!

AMARA

கொரோனாவை அடுத்து பேய் மழையிடம் சிக்கிய மும்பை… கரைபுரளும் வெள்ளத்தால் கவலையில் மக்கள்…!!

MANIMARAN M