Newskadai.com
அரசியல்

அக்.5 முதல் குடைச்சல் ஆரம்பம்… மீண்டும் சிக்கலில் சிக்கிய ஆ.ராசா, கனிமொழி…!

Share this:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தனியார் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், இதனால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அப்போது தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுதலை செய்தது. 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கொரோனா நெருக்கடி காலத்தில் வீடியோ கான்பிரன்ஸ் முறை மூலமாக வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் வழக்கை விரைவாக விசாரிக்க சம்மதித்துள்ளது. அதன் படி அக்டோபர் 5ம் தேதி முதல் தொடர் விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற பணிகள் தொடங்க உள்ள சமயத்தில் 2ஜி வழக்கை தூசு தட்டி எடுத்திருப்பதை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக திமுக மற்றும் அதன் தோழன் கட்சிகள் பார்க்கின்றன.


Share this:

Related posts

துணை முதல்வர் ஓ.பி.எஸ். திடீரென மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்…!!

THAVAMANI NATARAJAN

மோடி திட்ட மோசடிக்கு.. இந்த அறிவிப்புதான் காரணம்…!! முதல்வரின் அதிரடி குற்றச்சாட்டு…

MANIMARAN M

“உதயநிதி ஸ்டாலின் பரம்பரையே Play Boy தான்”… பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்…!!

AMARA

“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…!!

AMARA

“அது எல்லாம் முடிந்து போன விவகாரம்”… ஆர்.பி.உதயக்குமாரை அசிங்கப்படுத்திய எடப்பாடியார்…!!

MANIMARAN M

முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

MANIMARAN M