Newskadai.com
இந்தியா

ரூ.1 கோடி நிதியுதவி… கொரோனாவல் உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு முதல்வர் நிவாரணம்….

Share this:

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவல் உயிரிழக்கும் துப்புரவுப் பணியாளரின் குடும்பத்தாருக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில் டெல்லியில் கோவிட் -19 காரணமாக உயிரிழந்த துப்புரவுப் பணியாளரின் ராஜுவின் குடும்பத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை ரூ .1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக் களத்தில் பணியாற்றும் டாக்டர், செவிலியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், டெல்லியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த ராஜு என்கிற துப்புரவுப் பணியாளரின் குடும்பத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “எங்கள் கொரோனா வீரர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றி வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அந்த வீரர்களில் ஒருவராக எங்கள் துப்புரவு ஊழியர் ராஜுவும் இருந்து வந்தார். இன்று அவரது குடும்பத்தாரை அவரது வீட்டில் சந்திந்து ரூ .1 கோடி நிதியுதவி கொடுத்துள்ளேன். இந்த தொகை அவரது குடும்பத்திற்கு உதவும் என்று நம்புகிறேன் , “என்று அவர் பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

“இந்தியா கலாச்சாரத்தில் இருந்து இந்தியை நீக்கவே முடியாது”… மார்தட்டிக்கொள்ளும் அமித் ஷா, மோடி…!!

NEWSKADAI

மறியல் செய்யும் காண்டாமிருகம் : அசாமில் நடப்பது என்ன?

NEWSKADAI

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

செப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு?…. மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…!!

AMARA

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M

வாகன ஓட்டிகளே உஷார்: பெட்ரோல் பங்குகளில் இப்படியும் நூதன முறையில் மோசடி…!!

MANIMARAN M