Newskadai.com
உலகம்

கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

Share this:

உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வியலை சிதைத்து கூத்தாடி கொண்டிருக்கும் பெருந்தொற்று கொரோனா அரசியலையும் விட்டு வைக்கவில்லை. வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலை தள்ளி வைக்க கொரோனாவை காரணம் காட்ட முயற்சிக்கிறார் அதிபர் ட்ரம்ப். 45 லட்ச கொரோனாத் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா. இந்நோய்க்கான தடுப்பு மருத்தை தயாரிப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை இந்திய பிரதமர் மோடியிடம் மிரட்டி அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க சிபாரிசு செய்தார் அதிபர் ட்ரம்ப்.

மேலும் படிக்க:http://ஆத்தாடி எவ்வளவு பெரிசு… இப்படியொரு ராட்சத வவ்வால்களை பார்த்திருக்கமாட்டீங்க…!

இம்மருந்தினால் கொரோனா நோயாளிகளுக்கு பயன் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிபர் ட்ரம்பிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது. மேலும், உலக சுகாதார நிறுவனமும், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் கொரோனாவிற்கு எதிராக செயல்படுவதாக எந்த ஆய்வுக் குறிப்பும் இல்லை என்றும் அறிவித்து விட்டது. அமெரிக்க மக்களிடையே கொரோனாவுக்கு எதிரான போரில் அதிபர் ட்ரம்ப் தோல்வி அடைந்து விட்டார் என்று பரவலாக கருத்து கூறப்பட்டு வருகிறது. வரும் அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு எதிராக கொரோனா பெரும் பங்காற்றத் துவங்கியுள்ளது.

இதை சமாளிப்பதற்கு அதிபர் ட்ரம்ப் கொரோனா தடுப்பு மருந்தை விரைவில் அமெரிக்காவில் கண்டுபிடித்து உலகில் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பல வழிகளில் முயற்சித்து வருகிறார்.இந்நிலையில் அமெரிக்காவில் தேர்தல் நடத்தப்பட்டால் அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவாகி, அதில் பல முறைகேடுகளும் துல்லியமற்ற முடிவுகளும் வெளியாகும், அதனால் வரும் நவம்பரில் தேர்தலை நடத்தாமல் தள்ளி வைக்க வேண்டும் என்று ட்ரம்ப் யோசனைக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க:http://மாணவர்களின் கல்வியில் கல்லைத் தூக்கிப் போட்ட மத்திய அரசு… புதிய கல்விக் கொள்கை 2020…!!

இது குறித்து, அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லோரும் தபால் மூலம் வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால், நவம்பரில் நடக்கவுள்ள தேர்தல் துல்லியமற்றதாக, வரலாற்றிலேயே அதிக மோசடியான தேர்தலாக இருக்கும். மேலும் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சங்கடத்தைத் தரும். அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் நிலை வரும்வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும்” பதிவிட்டுள்ளார். அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி தேர்தலைத் தள்ளிவைக்கும் உரிமை அமெரிக்க காங்கிரஸிற்கு மட்டுமே உள்ளது. அதிபரின் யோசனையை ஏற்குமா அமெரிக்க நாடாளுமன்றம்..?


Share this:

Related posts

அமெரிக்காவில் சிக்கிய சீன உளவாளி… சிங்கப்பூர் குடிமகனின் கைதால் பரபரப்பு…!

NEWSKADAI

எல்லாத்தையும் ஓப்பன் பண்ணிடாங்கன்னு ஆடாதீங்க… இதுக்குமேலதான் பாக்கபோறீங்க கொரோனாவோட ஆட்டத்த…!! எச்சரிக்கும் உலக சுகாதர அமைப்பு..!!

MANIMARAN M

மக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

NEWSKADAI

இந்த ஆண்டு முடியும் வரை யாரும் எங்கள் நாட்டிற்குள் வர வேண்டாம் : மலேசிய அரசு அதிரடி!!

MANIMARAN M

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

தமிழக மருத்துவ மாணவர்களை காவு வாங்கிய வோல்கா நதி…

MANIMARAN M