உலக பெருந்தொற்று கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் காலத்தில் நீட், ஜே.இ.இ. போன்ற தேசிய தேர்வுகளை எழுதுச் சொல்வது மிகவும் நியாயமற்றது என ஸ்வீடன் நாட்டு இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி கிரெட்டா துன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜே.இ.இ. தேர்வுகளும், 13ஆம் தேதி நீட் தேர்வும் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பொது முடக்கம், பொது போக்குவரத்து முடக்கம், பள்ளி கல்லூரிகள் மூடல் போன்ற பல கட்ட நடவடிக்கைகளில் மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர்.
வடகிழக்கு இந்தியாவில் வரலாறு காணாத மழைக் காரணமாக பல மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. அந்த பகுதியில் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக போராடிய ஸ்வீடன் நாட்டு சிறுமி கிரெட்டா துன்பெர்க் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
It’s deeply unfair that students of India are asked to sit national exams during the Covid-19 pandemic and while millions have also been impacted by the extreme floods. I stand with their call to #PostponeJEE_NEETinCOVID
— Greta Thunberg (@GretaThunberg) August 25, 2020
இது குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “பல லட்சம் மக்கள் கடுமையான வெள்ளத்தாலும், கோவிட் -19 தொற்றுநோய்களினாலும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய காலத்தில் இந்திய மாணவர்கள் தேசிய தேர்வுகளை எழுதக் கேட்டுக் கொள்ளப்படுவது மிகவும் நியாயமற்றது. நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்ககோருபவர்களுடன் தாமும் இணைந்து உறுதுணையாக இருப்பதாகவும்” கிரேட்டா துன்பெர்க் பதிவிட்டுள்ளார்.