Newskadai.com
அரசியல்

நீட் தேர்வு விவகாரம்: பேரவையில் முதல்வர் – ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…!

Share this:

தமிழக சட்டப்பேரவை இரண்டாவது நாளாக இன்று கூடியது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினார். நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம் வேண்டும் எனக்கூறினார்.

 

DMK

திமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2010ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் தேர்வுக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது என்றும், கலைஞர் முதலமைச்சராக இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டினார்.

 

Assembly

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின் என்றைக்கும் நீட் தேர்வை திமுக ஏற்றுக்கொண்டதில்லை எனக்கூறினார். இதனால் பேரவையில் முதலமைச்சர், ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம் என்றும், ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து வரலாற்று பிழை செய்தது திமுக தான் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் ஆவேசமாக பதிலளித்தார். மேலும் நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்றும், இதில் அரசியல் செய்வது வேதனையாக உள்ளது.
மாணவர்கள் பெற்றோர்கள் கனவு கருகி விட கூடாது என்பதே அரசின் எண்ணம் என்றும் அவர் தெரிவித்தார்.


Share this:

Related posts

“தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமே கிடையாது”… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி…!!

AMARA

மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!

NEWSKADAI

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

உயிரைப் பறிக்கும் கழிவுகளை உடனே அகற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் – பா.ம.க

MANIMARAN M

மறைந்தது வசந்தம்… சொந்த ஊர் நோக்கி புறப்பட்டது வசந்தகுமார் உடல்…!!

NEWSKADAI

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?…. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை…!!

NEWSKADAI