Newskadai.com
இந்தியா தமிழ்நாடு

அதிதீவிரமடையும் யாஸ் புயல் – 90 ரயில் சேவைகள் ரத்து..!

Share this:

வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க நெருங்கி வருவதால் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அரபிக்கடலில் டவ் தே புயல் உருவாகி அதிதீவிர புயலாக மாறி மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியது. இதற்கு யாஸ் புயல் என பெயரிடப்பட்ட நிலையில் யாஸ் புயல் நாளை ஒடிசாவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய சாகர் தீவுகள் இடையே அதிதீவிர புயலாக நாளை நண்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவின் கேந்திராபாரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. யாஸ் புயலின் எதிரொலியாக தமிழகத்திலும் ராமேஸ்வரம், அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர்கள் , அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது, தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

புயலின் தீவிரத்தை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் உடனடித் தேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன. கிழக்குக்கடற்படை மற்றும் அந்தமான் நிகோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புயல் கரையை கடப்பதை ஒட்டி ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் வழியாக செல்லும் 90 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை, திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் 4 விரைவு ரெயில்களின் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் – ஹவுரா (எண்- 02822) ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து.

திருச்சி- ஹவுரா (எண்- 02664) ரயில் சேவை இன்று ரத்து.

சென்னை- நியூ ஜல்பைடி (எண்- 02611) ரயில் சேவை நாளை ரத்து.

புதுவை- ஹவுரா (எண்- 02868) ரயில் சேவை நாளை ரத்து.


Share this:

Related posts

அடுத்த 24 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது…

NEWSKADAI

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

மீண்டும் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு

AFRIN

இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து தொடக்கம்… தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொல்வாரா முதலமைச்சர்??

MANIMARAN M

ரெடியா..? இன்று முதல் ரூ.2,000 பெறலாம் – மேலும் 13 பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது

AFRIN