Newskadai.com
தமிழ்நாடு

டோல் கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்… பயணிகளே சுங்கவரி கட்டிய அவலம்…!!

tollgate
Share this:

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் விடப்பட்ட நிலையில் 50 சதவீத பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்து செங்கல்பட்டு வழியாக சென்றுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு சுங்கச்சாவடியை பேருந்து கடக்க சுங்கவரி கட்ட வேண்டும் என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர்கள் இது அரசு பேருந்து இதற்கு சுங்கவரி வசூலிக்க தேவையில்லை என்று சுங்கசாவடி ஊழியர்களிடத்து கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர், அதிகாரிகள் சொல்லாமல் சுங்கவரி கட்ட முடியாது என இருவரும் கூறியுள்ளனர்.

இவர்களது வாக்குவாதத்திற்கு இடையே  பேருந்து சுங்கசாவடியிலேயே வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததால் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி வந்து என்வென்று விசாரித்துள்ளனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நடந்ததை கூற. பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் தலா ரூ. 10 கொடுத்து 150 ரூபாய் சேகரித்து அதை சுங்கச்சாவடியில் கட்டினர். அரசு பேருந்திற்கு சுங்கவரி கேட்டு வெகுநேரமாக காத்திருக்க வைத்ததால் பயணிகள் பயங்கரமாக அவதிக்குள்ளானர்கள்.


Share this:

Related posts

மதுரவாயல் திருடனுக்கு “அயர்லாந்திலிருந்து” ஆப்பு… ‘கோலம்’ போடாத வீட்டிற்குள் நுழைந்தவனை கொத்தாக தூக்கிய போலீஸ்…!

THAVAMANI NATARAJAN

பட்டாசு ஆலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி…!!

MANIMARAN M

இளைஞரை காவு வாங்கிய வேகத்தடை… நெடுஞ்சாலைத்துறையின் அஜாக்கிரதையால் நிகழ்ந்த அவலம்…!

THAVAMANI NATARAJAN

தொடங்கியது பொறியியல் கலந்தாய்வு… இன்று சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங்…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்…!!

NEWSKADAI