வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் IPL போட்டிகள் துவங்கவுள்ளன. இதனையொட்டி இப்போடிகளில் விளையாட கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் உள்ளிட்ட 51 பேர் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தலைமையில் துபாய் சென்றது. துபாய் சென்ற அனைவருக்கும் அமீரக விதிமுறைபடி அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனைவரும் 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துல் செய்யப்பட்டனர். பரிசோதனையில் ஒரு உதவி பந்து வீச்சாளர் மற்றும் 4 பணியாளர்கள் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தயாராகி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாகவும், தான் இந்தியாவிற்கு திரும்பவுள்ளதாகவும் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். IPL அணியினருக்கு கொரோனா தொற்று உறுதியானதிலிருந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில், CSK-வின் முக்கிய வீரர் விலகுவது, மேலும் IPL போட்டிகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. CSK வீரர் சுரேஷ் ரெய்னா தனது சொந்த காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.