Newskadai.com
இந்தியா

இந்திய எண்ணெய் கப்பல் தீயை அணைக்க போராடும் இந்திய, இலங்கை, ரஷ்ய கடற்படை வீரர்கள்….

Share this:

இரண்டு லட்சத்து 70 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த நியூ டைமண்ட் என்ற சரக்கு கப்பல் கடந்த வியாழக்கிழமை இலங்கை அருகே வந்த பொழுது திடீரென கப்பலின் ஒரு பகுதியில் தீ பிடித்தது. கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மாலுமி ஒருவர் இந்த தீ விபத்தில் பலியானார். கப்பலின் பல பகுதிகளுக்கும் தீ பரவத் தொடங்கியது. பல லட்சம் டன் கச்சா எண்ணெய் இருந்ததால் பதற்றமடைந்த கப்பல் ஊழியர்கள் இந்தியா மற்றும் இலங்கை கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் நேரப்போகும் பெரும் ஆபத்தை உணர்ந்த இந்தியா மற்றும் இலங்கை நாடுகளை சார்ந்த கப்பல் படை மற்றும் விமானப்படைகள் தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த 22 ஊழியர்களை மீட்டனர். வேகமாக பரவிய தீயினால் கப்பல் வெடிக்கும் அபாய கட்டத்தில் இருந்தது. இலங்கையின் துறைமுகத்தில் முகாமிட்டிருந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பலும் மீட்புப் பணியில் இணைந்து கொண்டது.

மூன்று நாடுகளின் கூட்டு முயற்சியில் மூன்று நாட்கள் கடும் போராட்டத்திற்குப் பிறகு தீ தற்பொழுது அணைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கக்கடலில் தமிழக இலங்கை கடற்பரப்பில் ஏற்படவிருந்த மிகப்பெரிய அபாயம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய எண்ணெய்க் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதில் உள்ள கச்சா எண்ணெய் வேறு கப்பலுக்கு பாதுகாப்பாக மாற்றப்படும் என மீட்பு பணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

பாராளுமன்றத்தில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது : மத்திய அரசு அதிரடி…

MANIMARAN M

வாகன ஓட்டிகளே உஷார்: பெட்ரோல் பங்குகளில் இப்படியும் நூதன முறையில் மோசடி…!!

MANIMARAN M

தலைமைச்செயலகத்தில் தீ… தங்க கடத்தல் ஆவணங்களை மறைக்க முயற்சியா?

MANIMARAN M

கொரோனாவிலிருந்து மீண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா…. கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்…!!

NEWSKADAI

நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்: தேசிய திறனாய்வு மையம் அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

2024 -ல் தான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – அதிர்ச்சி தகவல்..!!!

MANIMARAN M