ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜனும் இடம் பெற்றிருந்தார்.யாக்கர் நடராஜனின் பந்து வீச்சு சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் திரும்பிய நடராஜனுக்கு ஊர் மக்கள் திரளாக வந்து வரவேற்பு அல்த்தனர். குதிரை வண்டியில், மேள தாளங்கள் முழங்க, மாலை அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்றனர்.
சொந்த ஊர் திரும்பிய நடராஜன், நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு பழனி மலையில் சுவாமி தரிசனம் செலுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வெற்றி கொண்டதற்கு நேர்த்திக் கடனாக பழனி முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ரோப் கார் மூலம் குடும்பத்துடன் பழனி மலைக்கு சென்று முருகனை வழிபாட்டார். பழனியில் நடராஜனை அடையாளம் கண்டுகொண்ட பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.