Newskadai.com
அரசியல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

C Mahendran
Share this:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்று முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள், சுகாதரத்துறை ஊழியர்கள் என பலரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் கொரோனா காலத்தில் பல சிக்கல்களை சந்தித்து வரும் மக்களின் குறைகளை கேட்டறிவதற்காகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட செல்லும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

C Mahendran
 

சென்னையைப் பொறுத்தவரை கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 869 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,15,649 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,690 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாகவே அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

C Mahendran

தொற்று உறுதி செய்யப்பட்ட போதும் அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும், கிண்டியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அக்கட்சியின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

இதைச் செய்தாலே போதும் கொரோனா கிட்ட நெருங்காது… முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்…

AMARA

முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

MANIMARAN M

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!

AMARA

“தலைமையேற்க வா”… மதுரையை தாண்டி கோவை வரை வீசும் அழகிரி அலை… பீதியில் திமுக…!!

MANIMARAN M

ஜெயலலிதா வழியில் எகிறி அடித்த எடப்பாடியார்… சலாம் போடும் எதிர்க்கட்சிகள்… அதிர்ச்சியில் மத்திய அரசு…!!

AMARA

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்?… முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை…!!

AMARA