இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (94) உடல் நலக் குறைவால் நேற்று முன்தினம் இரவு சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதனிடையே மூத்த தலைவர் நல்லகண்ணுவை முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.