Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

Share this:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தமிழக அரசை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கொரோனா நோய் பரவல் தடுப்பு மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன. அதை மெய்ப்பிக்கும் வகையில் கொரனோ நோய் சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் உணவு விவரங்கள் அதன் விலைமதிப்பு இரண்டிற்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் உணவுக்காக ரூபாய் 25 கோடி வரை தினமும் செலவிடப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு காலையில் இரண்டு இட்லி ஒரு சிறிய ஊத்தப்பம், மதியம் காய்கறி கூட்டு சாம்பார் சிறு அப்பளம் ஆகியவை உள்ளடங்கிய அளவு சாப்பாடு, இரவு இரண்டு இட்லி சிறிய ஊத்தாப்பம் என வழங்கப்படுவதாக தெரிகிறது. ஒரு சில இடங்களில் முட்டையும் பாலும் கூடுதலாக வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருள் மதிப்பிற்கும் அரசு தினமும் செலவழிப்பதாக சொல்லும் 25 கோடிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. முதலமைச்சரின் கணக்கு பொருந்தாக் கணக்காகவே வருகிறது. கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் மற்றும் அதற்கான விலை மதிப்பு பட்டியல் ஆகியவற்றை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் முதல்வர் வெளியிடவேண்டும்.” என்று கூறியுள்ளார்.


Share this:

Related posts

ஹிந்தி மட்டுதான் அரசின் அலுவல் மொழியா?? காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்…

MANIMARAN M

செப்.17ல் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு… அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு…!!

MANIMARAN M

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். – மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்.

NEWSKADAI

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA

இன்று தெரிந்துவிடும் அடுத்த முதல்வர் யாரென்று… முடிவுக்கு வரபோகும் உட்கட்சி பூசல்…

MANIMARAN M