Newskadai.com
இந்தியா

“அப்படி மட்டும் நினைக்காதீங்க”… கொரோனா விவகாரத்தில் அதிகாரிகளுக்கு பிரதமர் கொடுத்த அறிவுரை…!

vaccine for all
Share this:

உலக பெருந்தொற்று கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து பரிசோதனைகள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பல நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்தியாவிலும் கொரோனா ( corona virus ) பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த நோய் தடுப்பு மருந்து பெரும் அவசியத்துக்குள்ளாகிறது. கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “உலகில் எங்கு கொரோனா தடுப்பு மருத்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை இந்திய மக்களுக்கு கிடைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காணொலி மூலம் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் உள்ளிட்டவை பற்றிய ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

vaccine for all

இதில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர், நமக்கு அருகே இருப்பவர்களுக்கு மட்டும் தடுப்பு மருந்து கிடைக்க செய்யும் வகையில் நம்முடைய முயற்சிகளை நாம் நிறுத்தி விட கூடாது. நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து விரைவாகக் கிடைக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும். தடுப்பு மருந்துகள், சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் மருந்து விநியோக நடைமுறை ஆகியவற்றுக்கான ஐ.டி. தளம் ஆகியவற்றை உலக நாடுகள் முழுவதும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க http://கிடைக்குமா? கிடைக்காதா?… முதல்வரிடம் கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்…!


Share this:

Related posts

ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு : 24 மாணவர்கள 100% மதிப்பெண்கள்…

MANIMARAN M

பற்றி எரியும் பெங்களூரு… துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழப்பு… பரபரப்பு காட்சிகள்…!!

MANIMARAN M

செப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு?…. மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…!!

AMARA

கொரோனா நேரத்தில் இப்படியா?… காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!!

MANIMARAN M

ஒயர் தொழிற்சாலையில் தீ விபத்து, பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

THAVAMANI NATARAJAN

மக்களே உஷார்… காற்று மாசால் இப்படி ஒரு கொடிய நோய் பரவுதாம்… அதிர்ச்சி ரிப்போர்ட்…!

MANIMARAN M