வந்தே பாரத் மிஷன் மூலம் கடந்த 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து புறப்பட்ட விமானம், அன்று இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது செய்தபோது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையை தாண்டி சென்று 30 அடி பள்ளத்துக்குள் விழுத்து இரண்டாக உடைந்து விபத்துக்கு உள்ளானது. அந்த கோர விபத்தில் விமானி மற்றும் துணை விமானி உட்பட 19 நபர்கள் பலியானார்கள்.
இந்த விபத்தின் மீட்புப் பணிகளை தலைமையேற்று நடத்தியவர் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கே. கோபாலகிருஷ்ணன். அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., காவலர்கள் உள்ளிட்டோருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள கேரளா சுகாதரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக விமான விபத்து நடந்த பகுதியை கேரள முதல்வர் பினராயி விஜயனும் பார்வையிட்டிருந்தார். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பலருக்கும் தொற்று உறுதியானதால் கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.