Newskadai.com
இந்தியா

கொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர்… புதரில் சடலமாக மீட்பு….!!

corona
Share this:

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிக்கப்பால் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர். லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு அஞ்சி பலரும் தங்கள் பிழைக்க சென்ற மாநிலங்களையும், மாவட்டங்களையும் விட்டு சொந்த மண்ணிற்கு பதறியடித்துக் கொண்டு ஓடுவதை தினமும் நாம் காண்கிறோம். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒருபுறம் போராடி வரும் நிலையில், மற்றொருபுறம் கொரானாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பித்து செல்லும் நிகழ்வுகளும் அதிகமாகி வருகிறது.

இதுபோன்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் 57 வயதுக்குட்பட்ட நபர் கொரானாவால்
பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். தொற்றுக்கு அறிகுறியான வாய் வறட்சி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த  வெள்ளிக்கிழமை  இரவு முழுவதும் மருத்துவமனையில் அவதியில் தத்தளித்துள்ளார்.

ஆனால் உதவிக்கு யாரும் முன்வராததை தொடந்து சனிக்கிழமை மாலை ஸ்வரூப் ராணி மருத்துவனையில் இருந்து தப்பித்துள்ளார்.  தனக்கு நடந்த கொடுமைகளை தனது குடும்பத்தாரிடம் மருத்துவமனையில் இருந்த தப்பித்துச்செல்லும் போது தெரிவித்துள்ளார். அவர் தப்பித்து சென்ற காட்சியானது சிசிடிவி கேமராவில் பாதிவாகியுள்ளது. இதனையடுத்து தேடல் வேட்டை துரிதப்படுத்திய காவலர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் அதிர்ச்சியான சம்பவமே கண்ணில் பட்டது.

மருத்துவமனையில் இருந்து தப்பியோடி அந்த நபர், 24 மணி நேரத்திற்கு பிறகு
மருத்துவமனைக்கு அருகில் உள்ள புதரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த செய்தி மக்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இதுகுறித்து இறந்தவரின் மகள் கூறுகையில் “மருத்துவமனையின் அஜாக்கிரதையால் தான் என் தந்தை  இறந்துவிட்டார் எனவும், சிகிச்சைக்கு பணம் அளிக்கும் வரை அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை எனவும், நோயாளிகள் மிகவும்
துன்புறுத்தப்படுகிறார்கள்” எனவும் தெறிவித்துள்ளார். ஆனால், “நோயாளிக்கு காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் இருந்தது. அவரது உடல் நலம் சீராகிகொண்டிருந்தது ஆனால் அவர் தீடிரென வெளியேறியுள்ளார்” என
மருத்துவமனையின் முதல்வர் எஸ்.சிங். தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் திறப்பு… வெளியானது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

NEWSKADAI

“கருத்து சுதந்திரத்தை நசுக்கவே தேச துரோக வழக்கு பயன்படுகிறது”… மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி…!

MANIMARAN M

“மாணவர்கள் மன உளைச்சலுக்கு பெற்றோர்களே காரணம்”… பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு…!!

MANIMARAN M

நெட்வொர்க் இல்லாததால் கேள்விக்குறியான கல்வி… மகளுக்காக மலைமேல் பெற்றோர் செய்த சிறப்பு ஏற்பாடு…!!

MANIMARAN M

கேரள விமான விபத்து: மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M