Newskadai.com
சினிமா

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்… செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை…!!

Share this:

இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு அரசியல் வாதிகளும், சினிமா பிரபலங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பலரும் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. கோலிவுட்டைப் பொறுத்தவரை சமீபத்தில் நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தனர். இதையடுத்து பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், கடந்த சில நாட்களாகவே எனக்கு சில பிரச்சனைகள் இருந்தது. சளி பிடித்திருந்தது, மேலும் காய்ச்சலும் விட்டு விட்டு வந்தது. இதனை தொடர்ந்து நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். மருத்துவர்கள் பரிசோதனையின் முடிவில் பாசிடிவ் வந்ததாக கூறினார். ஆனால் மிக மிக குறைந்த அளவில் தான் தொற்று உள்ளது. அதனால் மருத்துவர்கள் என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்கள். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் என்னை தனிமைப்படுத்திக் கொள்ள விடமாட்டார்கள், கஷ்டப்படுவார்கள். அதனால் தான் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளேன்.

தற்போது நான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்கள் என்னை நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள். ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் யாரும் போன் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தார்.

திரையுலகின் முன்னணி பாடகரான பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஐசியூ-விற்கு மாற்றப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த செய்தி அவருடைய குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் தத்தளிக்கும் குடும்பத்தினர்…!!

POONKUZHALI

பூங்காவில் ஆபாச உடையில் பயிற்சி… பிரபல நடிகையை தாக்க முயன்ற கும்பல்… பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

“பிரார்த்தனையின் சக்தியே தனி”… எஸ்.பி.பி.க்காக பிரார்த்திப்போம் வாருங்கள்… விவேக்கின் உருக்கமான வேண்டுகோள்…!!

AMARA

காதலியை கரம் பிடித்தார் “பாகுபலி” வில்லன் ராணா… வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

AMARA

நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…!!

AMARA

அதிக சம்பளம் கேட்டு அடம்பிடித்த நயன்தாரா… அலறியடித்து ஓடிய பிரபல தயாரிப்பாளர்…!!

THAVAMANI NATARAJAN