Newskadai.com
தமிழ்நாடு லைஃப் ஸ்டைல்

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

Covaxin SRM
Share this:

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், புனேவில் இருக்கும் வைராலாஜி மையம், ஐதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை இணைந்து Covaxin என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை பரிசோதிக்க சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் உட்பட இந்தியாவில் 12 மையங்கள் தேர்வு செய்யப்பட்டன.

கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனைக்காக 18 வயது முதல் 55 வயது வயதுக்கு உட்பட்டவர்கள் வேறு எந்த நோய் உபாதைகளும் கொரோனா தொற்று இல்லாதவர்களும் தன்னார்வலர்களாக பங்கு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ், ஐதராபாத்தில் இருக்கும் நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனம், ரோதக்கில் இருக்கும் பிஜிஐஎம்எஸ் ஆகிய மருத்துவமனைகளில் பரிசோதனை துவங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியிலும் பரிசோதனை துவங்கப்பட்டது.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட 2 தன்னார்வலர்களுக்கு 2 மில்லி லிட்டர் அளவு உள்ள இந்த மருந்து அவர்கள் உடலில் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவ்விருவருக்கும் வாராவாரம் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு, பதினான்காவது நாளில் மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும். பிறகு 28-வது நாள், 42-வது நாள் 102-வது நாள், 109-வது நாட்களில் அவர்களுடைய இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதில் எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு திறன் உருவாகி இருக்கிறது என்றும் ஆய்வு செய்யப்படும்.

பின்னர் இந்த மருந்தின் பாதுகாப்பு சோதிக்கப்படும். அதன் பிறகு அதிக எண்ணிக்கையில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்படும். அதன் முடிவுகள் வெளிவந்த பிறகே இந்த மருந்தின் தரம் உறுதிப்படுத்தப்படும் என்று எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனை முயற்சி முழுமையடைந்து முடிவுகள் வர இன்னும் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்றும், பரிசோதனையில் நல்ல விளைவுகள் ஏற்பட்டால், அதன்பிறகே மருந்து உற்பத்தி தொடங்கப்படும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share this:

Related posts

சரசரவென குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

NEWSKADAI

சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1182 பேருக்கு தொற்று உறுதி…!!

NEWSKADAI

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை…. உற்சாக வெள்ளத்தில் தூத்துக்குடி மக்கள்..!!

AMARA

கொட்டித் தீர்க்கும் பருவ மழை… விவசாயிக்கு சாதகமா…? பாதகமா…?

THAVAMANI NATARAJAN

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இன்று முதல் ஆன்லைன் புக்கிங்…

THAVAMANI NATARAJAN

டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் 3,007 போலீசார்… உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்…!

NEWSKADAI