சூப்பர் ஸ்டார் கட்சி ஆரம்பித்ததும் இவர் டாப்பில் வந்துவிடுவார், இவர் தன் ரஜினியின் முதல்வர் வேட்பாளர் என ஒட்டுமொத்த தமிழகமும் கர்நாடக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின் அரசியல் அறிவிப்பிற்காக காத்திருந்தது. ஆனால் அவரோ சொல்லாமல் கொள்ளாமல் டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் ஐக்கியமாகி விட்டார்.
இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அண்ணாமலையை வசை பாடுவதற்காகவே #டக்கால்டி-அண்ணாமலை உள்ளிட்ட பல ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கழுவி ஊற்றினர். ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாத அண்ணாமலை தீவிர கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று கோவை வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருக்கும் போது அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது தவறு. அதனால் ஊரடங்கை மீறி ஒன்று கூடியதாக அண்ணாமலை, கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனைவர் மீதும் சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.