Newskadai.com
தமிழ்நாடு

மன்னார்குடின்னாலே பிரச்சனையா?… அரசு அதிகாரிகளின் மெகா ஊழலை அம்பலப்படுத்திய மக்கள்…!!

Share this:

2030-க்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தை முன்னெடுக்கும் மத்திய அரசு, ஊரக மற்றும் நகர்புறங்களில் சொந்த இடம் வைத்திருப்பவர்கள் வீடு கட்டிக்கொள்ள ரூபாய் 2 லட்சத்து 67ஆயிரத்தை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு பாரத பிரதமர் ஆவாஸ் யோஜனா (PMAY)என்று பெயர்.

 

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளர்களுக்கு நிதியை கொடுக்காமல் ரூபாய் இரண்டரை கோடி வரை ஊழல் செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயனாளர்கள் தலையாமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகார் திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் இயக்குனர் பொன்னியின் செல்வன் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

விசாரணையில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஊழல் செய்தது நிரூபணமானது. அதனால் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய மேலாளர் ராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, சண்முகசுந்தரம், பிரபாகரன் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழல் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பலர் இதில் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவர்களும் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Share this:

Related posts

சேலம் இரும்பாலையில் இன்று முதல் ஆரம்பம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்…!

NEWSKADAI

கந்த சஷ்டி கவச அவதூறு: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

NEWSKADAI

இது மத்திய அரசின் சூழ்ச்சி… சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து குறித்து பகீர் கிளப்பும் வைகோ…!

AMARA

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி என்கவுன்டர்… பதட்டத்தில் தூத்துக்குடி…

MANIMARAN M

இரும்புப் பெண்மணி மகேஸ்வரிக்கு சல்யூட் அடித்த கலெக்டர்…

MANIMARAN M

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?…. அதிரடி எச்சரிக்கை…!

NEWSKADAI