கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார் 71 வயது சதப்பா பரசப்பா. இவர் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா எம்.கே.உப்பள்ளி காந்திநகரை சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததையடுத்து அவரது மகன் சிகிச்சைக்காக பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். இரண்டு நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பினார் சதப்பா. இருப்பினும் அவரை கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக சதப்பா பரசப்பா உயிரிழந்தார்.
Amid the heavy rains when hospital did'nt provided ambulance, nobody came to help, relatives of 70-yr-old died person from MK Hubballi, Kittur taluk, #Belagavi carried dead body for cremation using bycycle. @XpressBengaluru @NewIndianXpress @santwana99 @CMofKarnataka @BelagaviDC pic.twitter.com/3h4vMjC1Rq
— Sunil Patil (@sunilpatilbgv) August 16, 2020
காய்ச்சலால் மருத்துவமனைக்கு சென்று வந்த சதப்பா கொரோனாவால் உயிரிழந்து இருக்கலாம் என்று அப்பகுதி மக்களிடையே செய்தி பரவியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் யாரும் சதப்பாவின் உடலை அடக்கம் செய்ய உதவ முன்வரவில்லை. இது குறித்து சதப்பாவின் மகன் சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர், அவருடைய மகனும் தன் நண்பரும் முழுகவச உடையணிந்து முதியவரின் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குள் தகவலறிந்த நகரசபை உறுப்பினர் புட்டப்ப பட்டாஷெட்டி, முதியவரின் உடலை அடக்கம் செய்ய வாகன வசதி செய்து கொடுத்தார். அதன் பின்னர் முதியவரின் உடல் அமரர் ஊர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.