Newskadai.com
லைஃப் ஸ்டைல்

கொரோனாவை தடுக்க இந்த 6 பொருட்கள் போதும்… சூப்பரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் இதோ…!!

Share this:

கொரோனா வைரஸ் என்றால் என்ன? கொரோனா வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகின்றது? இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளதா? என பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ள நிலையில் இருக்கிறார்கள். மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசு நாள்தோரும் பல்வேறு வழிமுறைகளை கூறிவருகிறது. இருப்பினும் மக்கள் பெரும் பீதியில் தான் இருந்து வருகிறார்கள். சுகாதாரத்துறை கூறும் வழிமுறைகளை பின்பற்றுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுமுறைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சரி வாங்க எந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்று பார்ப்போம்…

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவுகள்:

மிளகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா, சீரகம், பெருங்காயம், அன்னாச்சி பூ, முந்திரி, பாதாம், கீரைகள், கோவக்காய், வைட்டமின் சி (எலுமிச்சை, ஆரஞ்சு பழம், நெல்லிக்காய்)  போன்ற பொருட்களை நாம் உணவுகளில் சேர்த்து கொள்ளவேண்டும், அதே போல் நம் உடலுக்கு நோய் எதிப்பு சக்தியை உண்டாக்க வைட்டமின் டி தேவைப்படுகிறது அதற்காக தினமும்  சூரிய ஒளி நம் உடலில்படும் வகையில் தினமும் அரைமணி நேரமாவது இருக்கவேண்டும்.

கொரோனாவிலிருந்து எதிர்ப்பு சக்தி பெற பாட்டி வைத்தியம்…

நோய் எதிர்ப்பு கசாயம்… இதை வாரத்தில் இரண்டுமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்…

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் (மலை நெல்லி)-1

எலுமிச்சை பழம் -1

லவங்கம்-4,

மிளகு-4

மஞ்சள் 1/2 தேக்கரண்டி

இஞ்சி- சிரிய துண்டு

செய்முறை:

மலை நெல்லியை சிறியதாக வெட்டிக்கொள்ள வேண்டும், எலுமிச்சையை தோலுடன் நான்காக வெட்டிக்கொள்ள வேண்டும், இஞ்சியை நன்றாக நசுக்கிகொள்ளவேண்டும் இதனோடு லவங்கம், மிளகு, மஞ்சள் அகிய பொருட்களை எல்லாம் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி  கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து பாதியானதும், அதாவது 1/2 லிட்டராக மாறியதும் கசாயம் ரெடி…

வாரத்தில் இரண்டு முறை காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். இப்படியாக கொரோனா கசாயம் குடித்தும், அரசின் வழிகாட்டுதல் மற்றும் உணவுமுறைகளையும் கொஞ்சம் சீரியஸாக கடைபிடித்தால் இந்த கொரோனாவிடமிருந்து நாம் தள்ளியே இருக்கலாம்….


Share this:

Related posts

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….

MANIMARAN M

“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

NEWSKADAI

சரசரவென குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

NEWSKADAI

மனைவியிடம் கம்முனு இருங்க… சந்தேகம் வேண்டாம்… செல்வாக்கு பெருகும்..!! இந்த ராசிகாரர்களுக்கு…

NEWSKADAI

திருமண வாய்ப்புகள் கை கூடிவரும், உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்…

THAVAMANI NATARAJAN