Newskadai.com
தமிழ்நாடு

தமிழகத்தில் அதிர்ச்சி… ஒரே நாளில் கொரோனாவுக்கு 119 பேர் பலி…!!

Share this:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தினம் தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் உள்ளிட்டோர் எண்ணிக்கை குறித்து சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த அறிக்கையின் படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,971 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 119 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5, 278 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் 5, 633 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகத்திலும் கொரோனா தொற்றின் கோரப்பிடியில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 அயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது சற்றே ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.


Share this:

Related posts

பாதிக்குமேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு… பீதியில் ஜலகை மக்கள்…

MANIMARAN M

மக்களே உஷார்: விரைவில் நிரம்ப போகிறது பவானி சாகர் அணை… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN

கைவிட்ட தனியார் மருத்துவமனை, கொரோனா கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனை…

MANIMARAN M

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

தமிழகத்தில் கொரோனா… (30-08-2020) இன்றைய நிலை…!?

NEWSKADAI

மாமா… டவுசர் கழறாம பாத்துக்கோ…. மப்ப விட மானம் முக்கியம் தெரிஞ்சுக்கோ…

MANIMARAN M