Newskadai.com
தமிழ்நாடு

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஜலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!

Lock down
Share this:

சேலம் மாவட்டத்தில் கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேட்டூர் வட்டம், ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. ஜலகண்டாபுரத்தில் வசிக்கும் ஒருவர் கடந்த புதன் கிழமை அன்று கிடா விருந்து ஏற்பாடு செய்துள்ளார்.  இவ்விழாவில் கலந்து கொண்ட அந்த குடும்பத்தை சேர்ந்த 5 வது வார்டு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு  உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்ப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது தந்தை (70 வயது) திடீரென உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அவரது எதிர் வீட்டில் வசிக்கும் 20 வயது உடைய மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வயதான மூதாட்டியும் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழக்க, அப்பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து கிடா விருந்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களது வீடுகளுக்கு அருகே வசிப்பவர்கள் என 152 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் ஐலகண்டாபுரம் பஸ்டேண்ட் கடைவீதி, சுப்ரமணியசுவாமி கோவில் பகுதியில் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் ராமன் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

இதனிடையே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 152 பேரில் 45க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளை நாளை முதல் ஆகஸ்ட் 27ம் தேதி வரை 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

இன்று +1 விடைத்தாள் நகல் வெளியீடு… பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

தனி மாவட்டமாக உருவாகிறதா கும்பகோணம்?… வெற்றி இலக்கை எட்டப்போகும் நீண்ட போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

உலக பிரசித்திப் பெற்ற கோயில் திருவிழா…பக்தர்கள் பங்கேற்க தடை..!! மாவட்ட எஸ்.பி.அறிவிப்பு…

MANIMARAN M

நெகட்டிவா? பாசிட்டிவா?… தனியார் மருத்துவமனையின் பித்தலாட்டத்தால் சிக்கித் தவிக்கும் குடும்பம்…!

NEWSKADAI

தமிழகத்திற்கு கைக்கொடுக்கும் நெதர்லாந்து – கண்டெய்னரில் இறக்குமதியாகும் ஆக்சிஜன்

MANIMARAN M

“வடிவேல் பாணியில் வாத்தியார்களைக் கலாய்த்த மாணவன்”… சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர்…

MANIMARAN M