சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேட்டூர் வட்டம், ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் கறி விருந்தில் கலந்துகொண்டவர்களில் பரிசோதனை செய்யப்பட்ட 152 பேரில் 46க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளை நாளை முதல் ஆகஸ்ட் 27ம் தேதி வரை 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு சேலம் ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவிற்கு அனைத்து மளிகை வியாபார சங்கம், நகைகடைகள், இதர கடைகளும் ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:http://நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஐலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!
அதன்படி மிகவும் முக்கிய தேவைகளான மருத்துவமனைகள், பால் மற்றும் மருந்து கடைகளை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை பொருட்கள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் கட்டாயம் மூடப்படும். என சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜலகண்டாபுரம் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.