Newskadai.com
இந்தியா

இறுதிக்கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பு மருந்து… இந்தியாவிற்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு…!!

Share this:

உலக அளவில் பரவிவரும் கொரோனா வைரஸ் எல்லா நாடுகளுடைய செயல்பாடுகளையும் முடக்கிப் போட்டுள்ளது. இந்நோய்க்கான தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கு பல நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனோ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், பயோடெக்னாலஜி துறை, மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தருவது, உள்கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுப்பது,  நிதி உதவி பெற்றுத்தருவது  போன்ற பணிகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய பயோடெக்னாலஜி துறை செயலாளர் ரேணு ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை, 3-வது கட்டமாக இந்தியாவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க நாடு முழுவதும் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில  வாரங்களில் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் பரிசோதனைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து முடிக்கப்படவுள்ளது. பின்னர்  மனிதர்கள் மீதான இறுதிக்கட்ட பரிசோதனை முடிந்து வெற்றி கண்ட பின், தடுப்பு மருந்து உற்பத்தி துவங்கப்படும்”  என்றும் தெரிவித்தார்.

இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க உலகிலேயே அதிக தடுப்பூசிகளை தயாரிக்கும் ‘செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இதன் பங்குதாரரான அஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் தேர்ந்தெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவில் முதல் கட்ட பரிசோதனையில் உள்ள ஸைடஸ் கெடிலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றிபெற்றால், உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share this:

Related posts

சுயசார்பு திட்டத்தின்கீழ், 101 வகையான ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை… ராஜ்நாத் சிங் அறிவிப்பு..

MANIMARAN M

கேரள நிலச்சரிவு: சேற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு…!!

THAVAMANI NATARAJAN

உயர் கல்விக்கு விடுப்பு… புதிய கல்விக்கொள்ளையின் முக்கிய அம்சங்கள் என்ன?

MANIMARAN M

கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து..! மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி…

MANIMARAN M

“பசு பாதுகாவலர்கள்” என்ற போர்வையில் வெறியாட்டம்… ரத்தத்தை உறைய வைக்கும் பகீர் வீடியோ…!!

POONKUZHALI

“அப்படி எல்லாம் மாற்ற முடியாது”…. பி.எம்.கேர்ஸ் நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

MANIMARAN M