கொரோனா நோய்த் தொற்றின் முதல் நிலை அறிகுறிகள் பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் இருப்பின், அவருக்கு கீழ்காணும் முறைகளில் பரிசோதனைகள் நடத்தப்படும்.
மேலும் படிக்க:http://ராமரின் சுபிட்சத்தால் பளபளக்கும் அயோத்தி… காண கிடைக்காத அற்புத புகைப்படங்கள்…!!
- அறிகுறிகள் தென்படும் முதல் சில நாட்கள் கொரோனா வைரஸ் மூக்கு / நாசி / தொண்டை பகுதிகளில் இருக்கும்.
- நாம் எடுக்கும் RTPCR பரிசோதனை மூக்கு நாசிக்குள், மேல் தொண்டைப்பகுதியில் அல்லது தொண்டைப்பகுதியில் எடுக்கப்படுகின்றது.
- அந்த இடத்தில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்பதை அறிவதே இந்த RTPCRஇன் நோக்கம்.
- இந்த பரிசோதனை அறிகுறிகள் தோன்றிய முதல் சில நாட்களில் RTPCR பரிசோதனை செய்தால் மட்டுமே பாசிடிவ் ரிசல்ட் வரும் வாய்ப்பு அதிகம்.
- அந்த முதல் சில நாட்களை கழித்து RTPCR டெஸ்ட் எடுத்தால் பலருக்கும் நெகடிவ் என்று ரிசல்ட் வருவதற்கு காரணம். கொரோனா வைரஸ் தொண்டைப்பகுதியில் இருந்து பல்கிப்பெருகி கீழிறங்கி சுவாசப்பாதையின் கீழ்ப்பகுதிக்கு நகர்ந்திருக்கும்.
- அங்கிருந்து நுரையீரலுக்கு சென்று தனது வேலையை தொடங்கும் நேரத்தில்
இருமல் / மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை தென்படும்.
- அப்போது தொண்டையில் வைரஸ் இருக்கிறதா என்று பார்த்தால் பெரும்பாலும் நெகடிவ் என்றே ரிசல்ட் வரும்.
மேலும் படிக்க:http://கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து…. பெண்கள் T-20 போட்டியை விரைவில் நடத்த முடிவு…!!
- எனவே சிடி ஸ்கேன் நெஞ்சுப்பகுதிக்கு எடுக்கப்படுகின்றது.
- நெஞ்சுப்பகுதி சிடி ஸ்கேனில் நுரையீரலில் தனது வேலையை செவ்வனே செய்த கொரோனா வைரஸ் தொற்றின் வரைபடங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன.
- இதை CORAD (Covid RADiological features) என்ற அலகு கொண்டு நுண்கதிரியில் சிறப்பு நிபுணர்கள் வழங்குகிறார்கள்.
- அதில் CORAD 3 முதல் 5 என்ற நிலை என்பது உள்ளே வந்திருப்பது கொரோனா தொற்று என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்கின்றது.
- அதிலும் CORAD 4 மற்றும் 5 என்பன உறுதியான நுரையீரல் கொரோனா தொற்று நிலை ஆகும்.
- எனவே சிடி ஸ்கேன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கட்டாயம் RTPCR பரிசோதனை பாசிடிவ் வர வேண்டும் என்ற அவசியமில்லை.
- அவர்களுக்கு RTPCR நெகடிவ் என்று வந்தால் அதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதும் அவசியமில்லை
- கொரோனா தொற்று தொண்டையில் இல்லை என்றால் நுரையீரலில் இருக்கிறது என்று அர்த்தம்.
அதாவது ஒருவன் காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க அலாரம் வைக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அலாரம் அடிப்பதை அவன் கவனிக்காமல் தூங்கிவிடுகிறான். ஜன்னல் வழியாக வெயில் கண்ணைப்பறிக்கிறது.. அதிரடியாக எழுந்திருக்கும் அவன் தனது அலாரம் க்ளாக்கை மீண்டும் எடுத்து ஐந்து மணி ஆகிவிட்டதா என்று பார்ப்பதற்கு சமம்… நுரையீரலில் சிடி ஸ்கேன் மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் RTPCR நெகடிவாகக் கூட இருக்கலாம் என்று பரிசோதனை முறைப்பற்றி கூறுகிறார், சிவகங்கையைச் சார்ந்த பொது நல மருத்துவர Dr.ஃபரூக் அப்துல்லா.