Newskadai.com
தமிழ்நாடு

அடுத்த ரவுண்டுக்கு தயாரான கொரோனா… தொற்றால் முடங்கும் ஜலகை சுற்றுவட்டாரம்…!!

Share this:

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்ட பகுதிகளில் தீவிரமடையும் கொரோனா பரவல் கடந்த வாரம் ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 90க்கும் மேற்கொண்டோருக்கு உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக ஜலகண்டாபுரம் முழு ஊரடங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனை மற்றும் மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை ஜலகண்டாபுரத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜலகண்டாபுரம் அருகில் உள்ள செலவடை ஊராட்சிக்குட்பட்ட பச்சாகவுண்டனூரைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் செல்வடை கிராமத்தில் இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட அந்த பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சேலம் அரசு மத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். தற்போது மீண்டும் செலவடை பகுதியில் கொரோனா பரவல் அவ்வூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட செலவடை கிராமம் பச்சாகவுண்டனுரை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் சளியால் அவதிபட்டு வந்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்கு சென்றவருக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரின் மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருவரும் கொரோனா பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.


Share this:

Related posts

கோவை விவசாயியின் சாதனை: 2 ஏக்கரில் 250 வகை காய்கறிகள் பயிட்டு அசத்தல்…!

NEWSKADAI

வேலையில்லனா என்ன பாஸ்…!! பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய அசத்தல் இளைஞர்கள்..!!

MANIMARAN M

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN

வசமாக சிக்கிய ஆதாரம்… மத கலவரத்தில் இருந்து தப்பிய கோவை… பகீர் வீடியோ…!!

MANIMARAN M

கரைபுரண்டோடிய தென்பெண்ணை ஆறு… விபரீதம் புரியாமல் குளித்த இளைஞர்கள் மூழ்கி பலி…!!

THAVAMANI NATARAJAN

அய்யா… குளத்த காணோம்யா…குளத்த காணோம்… கண்டுபிடிச்சிக் குடுங்கய்யா…

MANIMARAN M