Newskadai.com
அரசியல்

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம்… தமிழக அரசுக்கு அதிரடி யோசனை கொடுத்த ராமதாஸ்…!

Share this:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதைப் போன்று, தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன் வர வேண்டும்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 24) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நோய்த் தொற்றுகள் எந்த அளவுக்கு அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அது நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஓர் அங்கம்தான் என்று உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்க கழகமும் கூறுகின்றன.

அதனால், இதை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை. தமிழத்தில் நோய்த் தாக்க விகிதமும் கட்டுக்குள்தான் இருக்கிறது. நேற்று தமிழக அரசு கொரோனா தொடர்பாகக் கொடுத்த புள்ளிவிவரங்கள் மனநிறைவு அளித்தாலும் கூட, நாம் நினைத்தால் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த சென்னையில் கடந்த ஜூன் 19-ம் தேதி முழு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்றைய நாளில் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 2,015 பேரில் 474 பேர் மட்டும்தான் சென்னை புறநகர் மற்றும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், நேற்றைக்கு இந்த எண்ணிக்கை 4,015 ஆக உயர்ந்திருக்கிறது.இதற்கான காரணங்களில் முக்கியமானது சென்னையிலிருந்து குறுக்கு வழிகளில் சொந்த ஊர்களுக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா ஆய்வு செய்து கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் தவறிவிட்டதுதான். அவ்வாறு செய்யத் தவறிய பகுதிகளில்தான் கொத்துக் கொத்தாக கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மொத்தம் 113 கொரோனா ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சளி மாதிரி எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் சளி மாதிரி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கொரோனா ஆய்வு செய்துகொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் ஆய்வு செய்து கொள்ளாத பலர், கொரோனாவைப் பரப்பி சமுதாயத்திற்குப் பெரும் கேடு இழைக்கின்றனர்.

தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது, கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தமிழக அரசு ஆகியவை ஆலோசனைகளை வழங்கியும் சென்னை போன்ற நகரங்களில் பெரும்பான்மையினர் அதைக் கடைப்பிடிப்பதில்லை.

கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். ஒரு கை தட்டினால் ஓசை வராது, இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை எழும் என்பதை மக்கள் உணர வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகளுக்குத் துணை நிற்க வேண்டும்.

தமிழக அரசும் பொது மக்கள் பாதுகாப்பு விதிகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய, ஜார்க்கண்ட் மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள் மீது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதைப் போன்று, தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தனது அறிக்கையில் பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.


Share this:

Related posts

“எடப்பாடியாரே என்றும் முதல்வர்”… ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியுடையது அல்ல…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி…!!

AMARA

“உதயநிதி ஸ்டாலின் பரம்பரையே Play Boy தான்”… பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்…!!

AMARA

மறைந்தது வசந்தம்… சொந்த ஊர் நோக்கி புறப்பட்டது வசந்தகுமார் உடல்…!!

NEWSKADAI

ம.பி முதல்வர் போல அதிரடி காட்டுங்க… எடப்பாடியாரை உசுப்பேத்தும் ராமதாஸ்…

MANIMARAN M

குமரியை கைப்பற்ற துடிக்கும் பொன்னார்… “டார்கெட் கன்னியாகுமரி” வியூகம் வகுக்கும் பாஜக…

MANIMARAN M

எஸ்.வி.சேகரின் ஆசையை விரைவில் அதிமுக அரசு நிறைவேற்றும்

THAVAMANI NATARAJAN