Newskadai.com
இந்தியா தமிழ்நாடு

கொரோனா வரமா?… சாபமா…? கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

Share this:

சந்திக்க செல்லும் நபர் நல்லவரா?என்று சிந்தித்து கொண்டிருந்த நாம் இன்று அவர் நோய் தொற்று உள்ளவரா?என்று சந்தேகிக்க வேண்டிய நிலைக்கு நம்மை கொரோனா கொண்டு வந்துள்ளது. மனிதர்களை மட்டுமா? காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் என்று அன்றாடம் நாம் வாங்கி உபயோகிக்கும் அனைத்து பொருட்களிலும் கூட என்னென்ன வைட்டமின்கள் இருக்கின்றது என்று ஆராய்ந்து பயன்படுத்திய காலம் போய் ஏதேனும் வைரஸ்கள் ஒட்டியிருக்குமோ? என்ற பீதியுடனே வாங்கி வர வேண்டியிருக்கிறது. இப்படி மனரீதியாக மட்டுமின்றி, பணரீதியாகவும் பல கஷ்டங்களை கீழ், மேல், மற்றும் நடுத்தரம் என்று பாகுபாடின்றி அனைவரும் எதிர்கொண்டுவருகிறோம்.

பல்வேறு தொழிலாளர்கள் வேலையிழந்தும், தங்குவதற்கு இடமின்றியும், தன் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உரிய இடத்தில் முறையாக சேர்க்க வழியின்றியும், உரிய விலையில் விற்க முடியாமலும் வறுமையில் வாடுகின்றனர். சிறு குறு தொழில் முனைவோர்கள் தங்களது தொழில்கள் முடங்கி உணவுக்கே வழியின்றி சிரமத்தில் உள்ளனர்.

கருவறையில் தொப்புள்கொடி மூலம் உணவு உட்கொண்டு வாழ்ந்து வந்த குழந்தை, இவ்வுலகிற்கு தன் முகம் காட்டி பிறந்தபின் அந்த தொப்புள் கொடியை துண்டிப்பது போல், இது நாள் வரை நாம் வாழ்ந்த வாழ்வியல் முறையை துண்டித்து கொரோனா இன்புற்று கூத்தாடிக் கொண்டிருக்கின்றது.

 

இப்படிப்பட்ட நெருக்கடி நிலையிலும் டெல்லி சென்று வந்தவர்கள் தமிழகத்தில் கொரோனாவை பரப்பி வருகிறார்கள் என கூறி ஒரு கும்பல் பிரிவினையை ஆரம்பித்துள்ளது. அவர்கள் தான் கொரோனாவின் பிறப்பிடம் அவர்களுடைய கடைகளில் எதையும் வாங்காதீர்கள், அவர்களுடைய குடும்பத்தினரை தொட்டு மருத்துவம் பார்க்காதீர்கள் என வெறுப்புவாதத்தை பகிர்ந்து வருகின்றனர். இதேநேரத்தில், கொரோனாவால் வேலை இழந்து, தாயகம் திரும்ப வழியின்றி வெளி நாடுகளில் சிக்கித் தவிப்பவர்களின் நிலையோ அந்தோ பரிதாபம். இருமடங்காக உயர்த்தப்பட்ட விமான கட்டணங்களும், தாய் நாடு திரும்பியவுடன் தனிமைப்படுத்த வசூலிக்கப்படும் கட்டணங்களும், அவர்களை தாயகம் திரும்பவிடாமல் பரிதவிக்கவிட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் பல கெட்ட விஷயங்களை செய்திருந்தாலும், கொரோனா வைரஸ் நமக்கு சில நல்ல பாடங்களையும் கற்பித்திருக்கிறது. எப்போதும் தடபுடலாக நடக்கும் கல்யாணங்களுக்கு பதிலாக, நெருங்கிய சொந்தங்கள் சூழ எளிமையான திருமணங்களை காண முடிகிறது. காது குத்து, மஞ்சள் நீராட்டு, பிறந்த நாள் என்றாலே வீதி தோறும் வைக்கப்படும் FLEX விளம்பரங்கள் எங்கும் தென்படவில்லை. LOCK DOWN என்றதும் மக்கள் அரிசி மண்டிகளுக்கும், மளிகை மற்றும் காய்கறி கடைக்களுக்கும் சென்று பொருட்களை வாங்கி குவித்தார்களே தவிர, ANDROIND PHONE MODEL மாற்றவோ, நகைகளை EXCHANGE OFFER-ல் மாற்றவோ செல்லவில்லை. மாதத்திற்கு இரண்டுமுறை சளி, காய்ச்சல் என்று குழந்தைகளை தூக்கிக் கொண்டு CLINIC போன பெற்றோர்களோ அங்கு செல்லாமல் ஆச்சர்யத்துடன் இருக்கின்றனர்.

அடிக்கடி தொலைக்காட்சி மற்றும் விளம்பர ஊடகங்களின் வழி பிரபலப்படுத்தபட்ட HEALTH DRINKS மற்றும் துரித உணவுகள் தான் சிறந்தது என்று கூறி வந்தவர்கள் தற்பொழுது இஞ்சி, எலுமிச்சை, கீரை வகைகள், முட்டை, காய்கறி, பழங்கள் போன்ற இயற்கையான உணவுகளை தேடி, தேடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மக்களுக்கு எது அவசியம் எது ஆடம்பரம் என்று புரிய தொடங்கியிருக்கிறது. மனைவி நாள் முழுவதும் வீட்டில் எப்படி அனைத்து வேலைகளையும் செய்து, பிள்ளைகளையும் கணவனையும் கவனித்து தன் குடும்பத்திற்காக வாழ்கிறாள் என்பதை கணவன்மார்களும், கணவனின் சம்பளம் போதவில்லையே என்று புலம்பிய மனைவிமார்கள், ஆடம்பரமின்றி அழகாய் வாழ தன் கணவனின் வருமானம் போதும் என்று புரிந்து கொள்ள ஓர் அரிய சந்தர்ப்பத்தை இந்த கொரோனா கற்றுக் கொடுத்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, பஞ்சாபை சேர்ந்த இரு சகோதரர்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை விற்று அவர்கள் பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உணவினையும், பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளனர். கோவையில் ஒரு இஸ்லாமியர் தனது மனைவியின் நகைகளை விற்று தமது பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பங்கள் பசியாற வழிவகை செய்தார். இது போன்ற நெஞ்சுருக செய்யும் மனித நேய நிகழ்வுகள் நாடு முழுவதும் அரங்கேறியது.இவ்வாறு சாதாரண மக்களுக்கும் உதவி புரியும் மனப்பக்குவத்தைஏற்படுத்தி,
இதுபோன்ற மனித நேய செயல்கள் வருங்காலங்களிலும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தை இந்த கொடிய கொரோனா மனிதர்களிடையே விதைத்துக்கொண்டிருக்கிறது. ஆக சாபமாய் வந்த கொரோனா, நமக்கு பல நன்மைகளையும் வரமாக தந்திருக்கிறது என்பது நிதர்சமான உண்மை…!


Share this:

Related posts

இந்தியாவிலேயே முதன் முறை… எடப்பாடி அதிரடியால் கதிகலங்கும் கொரோனா…!!

THAVAMANI NATARAJAN

குஷ்புவுக்கு போட்டியாக மோடி… சேலத்தில் தூள் பறக்கும் போஸ்டர்கள்…!

MANIMARAN M

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்…!!

NEWSKADAI

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி என்கவுன்டர்… பதட்டத்தில் தூத்துக்குடி…

MANIMARAN M

தற்சார்பு இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்…பிரதமர் மோடியின் சுதந்திர தின சூளுரை

MANIMARAN M

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M