Newskadai.com
தமிழ்நாடு

மக்களே இது போன்ற தரமற்ற ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யாதீர்..!!

Covid
Share this:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் இருந்து வருகிறது, இதனால் மக்கள் தங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்து வருகிறார்கள், கொரோனா பரிசோதனைகள் முதலில் அரசு மருத்தவமனைகளில் மட்டுமே செய்யப்பட்டு வந்தது, இதனால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய அரசு அனுமதி வழங்கியது. இதில் அதிக பணம் வசூலிப்பதாகவும், முறையாக பரிசேதனை செய்யப்படுவதில்லை என பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பரவலாக பல்வேறு தகவல்கள் வருகிறது.

Private Labஇதன் தொடர்ச்சியாக சென்னை வடபழனி 60 அடி சாலையில் அமைந்துள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டர் இயங்கி வருகிறது, இந்த ஸ்கேன் சென்டரில் செய்யப்படும் பரிசோதனைகள் உறுதி தன்மை இல்லாமல் இருப்பதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து பொது சுகாதார திட்ட இயக்குனரால் ஆய்வு செய்யப்பட்டதில் ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் செய்யப்பட்ட 128 கொரோனா பரிசோதனைகளில் 44 பரிசோதனைகள் தரம் மற்றும் உண்மைத்தன்மை இல்லாமல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறாக செய்யப்பட்ட ஒரு கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதற்கு பதிலாக கொரோனா உறுதி செய்யப்பட்டதாக ரிப்போட் வழங்கி இருப்பதை கண்டறிந்தனர் இதனால் அந்த ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய தற்காலிக தடை செய்ப்பட்டு ஆர்த்தி ஸ்கேன் சென்டர் மூடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே யாரை தான் நம்புவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்


Share this:

Related posts

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

MANIMARAN M

வெடித்து சிதறிய பட்டாசு ஆலை… பயங்கர வெடி விபத்தில் 5க்கும் மேற்பட்டோர் பலி..

THAVAMANI NATARAJAN

“எல்லா புகழும் தமிழக மக்களுக்கே”… கேல் ரத்னா விருது பெற்ற சேலம் மாரியப்பன் பெருமிதம்…

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M

அபராதம் கேட்டு அடாவடி செய்த பேரூராட்சி ஊழியர்கள்… கொரோனா லாக்டவுன்னில் அதிகரிக்கும் கொடுமை

THAVAMANI NATARAJAN

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களே உஷார்… கொட்டி தீர்க்க காத்திருக்கும் மழை…!!

THAVAMANI NATARAJAN