Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

கொரோனா ஊரடங்கின் தளர்வுகள் என்னென்ன..?

corona lockdown extension
Share this:

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், பாதிப்பு மிகுந்த 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பரவல் 35 ஆயிரத்தை கடந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தன.இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த முழு ஊரடங்கு ஜூன் முதல் வாரமும் நீட்டிக்கப்பட்டது. இதன் பலனாய் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தது. ஆரம்பக்கட்டத்தில் 35 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 22 ஆயிரமாக குறைந்தது.

இந்த சூழலில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலை 6மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து அத்யாவசிய கடைகளும், தொழில்நுட்பம் சார்ந்த சில கடைகளும் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.

எனவே இம்மாவட்டங்களில் தொற்று பரவலைக்கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும் அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 7-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

1. தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணிவரை செயல்பட அனுமதி
2. காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி
3. மீன் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி
4. அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
5. சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி

Share this:

Related posts

கொரோனாவில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு… அரசுக்கு அதிரடி கோரிக்கையுடன் வழக்கு

AMARA

ஏழை மாணவியின் ஐ.ஏ.எஸ்.கனவு… வீடு தேடி போய் உதவிய மாவட்ட ஆட்சியர்…!!

THAVAMANI NATARAJAN

“இனி மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால்”… அதிரடி உத்தரவை பிறப்பித்து அதிரவைத்த உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

மோடி திட்டத்தில் கேடித்தனம்… நானும் ”விவசாயிதான்” என்று கோடிகணக்கில் கொள்ளை…

THAVAMANI NATARAJAN

“தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்”… அதிமுகவில் வெடித்தது உச்சகட்ட மோதல்…!!

AMARA

திமுக முன்னாள் அமைச்சர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்டவரை கொண்டு சென்ற எமன்…!!

AMARA