Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

கொரோனா ஊரடங்கும், தளர்வுகளும் – இயல்புநிலைக்கு திரும்புகிறதா தமிழகம்..?

Share this:

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததால் தமிழகத்தில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்புகிறது.

கொரோனா தொற்றின் இரண்டாது அலையினால் தமிழகத்தில் நாளொன்றின் பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்து பதிவானது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. சில இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டன. இந்த சூழலில் தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவெடுத்தது. அதன்படிகடந்த 10ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒருவாரத்திற்கு செயல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கபட்டது.

இந்தநிலையில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், கொரோனா ஊரடங்கை 14ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். ஆனால், இந்த ஒருவார கால ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நேற்று (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள், சாலையோர கடைகளும் திறக்கப்பட்டன.

சென்னையில் இறைச்சி மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. எனினும், இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் பொருட்களை வாங்க வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். அத்யாவசிய தேவைக்கான கடைகள் மட்டுமின்றி சார் பதிவாளர் அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்களும் செயல்பட தொடங்கின. இதுதவிர மின்சாதனங்கள் விற்பனை செய்யவும், பழுது பார்க்கவும், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் முழுவதும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டது.

சாலையோர கடைகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனால் சாலையோரங்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு பழங்கள், காய்கறி, பூ விற்பனை நடக்க தொடங்கியது. மேலும் ஹார்டுவேர், மின் பொருட்கள், வாகன உதிரி பாக விற்பனை செய்யும் கடைகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனால் அந்த கடைகளில் மெக்கானிக் உள்ளிட்ட தொழிலாளிகள் சென்று வேண்டிய பொருட்களை வாங்கினர். ஆனால், டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள், சலூன் மற்றும் அழகு நிலையங்கள், துணிக்கடைகள், மால்கள், கோவில்கள், சுற்றுலா-பொழுதுபோக்கு தலங்கள், பஸ் சேவை, உயிரியல் பூங்காக்கள், ஜிம்கள் போன்றவற்றுக்கான தடைகள் தொடருகின்றன.

இப்படி ஓரளவு கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் தமிழகத்தில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்புகிறது. எனினும் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முழுவதுமாக கடைப்பிடித்தால் மட்டுமே நோய் பரவலை முற்றிலுமாக குறைக்க முடியும்.


Share this:

Related posts

#coronavirus தினந்தோறும் உயர்ந்துகொண்டே இருக்கும் இறப்பு எண்ணிக்கை- இன்றைய கொரோனா நிலை..!!

NEWSKADAI

காசு கொழுத்துபோன நித்யானந்தா… கைலாசாவுக்கு தனி பேங்கு தெறக்கப்போறாராம்…

THAVAMANI NATARAJAN

“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…!!

AMARA

வேகமெடுக்கும் கொரோனா… நாகை, கடலூரில் முதல்வர் இன்று ஆய்வு…!!

MANIMARAN M

கொட்டித் தீர்க்கும் பருவ மழை… விவசாயிக்கு சாதகமா…? பாதகமா…?

THAVAMANI NATARAJAN

திமுக பொதுச்செயலாளராகிறார் துரைமுருகன்?… செப்.9-ல் கூடுகிறது திமுக பொதுக்குழு…!

AMARA